Wednesday, March 26, 2014

உச்சநீதி மன்றத்தில் வழக்காட "3" தகுதிகள் தேவை

உச்சநீதி மன்றத்தில் வழக்காட "3" தகுதிகள் தேவை
**********************************

1) 4 ஆண்டுகளுக்கு குறையாமல் ஏதாவது மாநில பார் கவுன்சிலில் பெயர் பதிவு செய்யப்பட்டு வழக்குரைஞர் தொழில் செய்தவராக இருக்க வேண்டும்.

2) .இந்த 4 ஆண்டுகளோடு சேர்த்து கூடுதலாக ஒரு ஆண்டு, ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் பதிவு பெற்ற 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ள வழக்குரைஞரிடம் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

3) மேலே கூறப்பட்ட இரண்டு தகுதிகளையும் பெற்ற பின்னர் உச்சநீதி மன்றத்தால் நடத்தப்படும் "Advocate on Record" என்று சொல்லப்படும் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

"Advocate on Record"
****************
இந்த தேர்வில் மொத்தம் 4 பாடங்கள் உள்ளது. அவை பின்வருமாறு,

100 மதிப்பெண்கள் 1) SUPREME COURT RULES OF PRACTICE & PROCEDURE.
100 மதிப்பெண்கள் 2) DRAFTING & PLEADING.
100 மதிப்பெண்கள் 3) ACCOUNTANCY FOR LAWYERS.
100 மதிப்பெண்கள் 4) LEADING CASES.

தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது "50" மதிப்பெண்கள் பெற வேண்டும்.

4 பாடத்திலும் சேர்த்து குறைந்தது 60% அதாவது 400 க்கு 240 மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இவ்வாறாக தேர்ச்சி பெற்ற வழக்குரைஞர்கள் உச்சநீதி மன்றத்தில் "Advocate on Record" ஆக அங்கீகாரம் வழங்கப்படும்.

உடனே உச்சநீதிமன்ற பெயர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

இதன் பிறகு மட்டுமே உச்சநீதி மன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்ய முடியும்.

அன்றிலிருந்து அவர் "உச்சநீதிமன்ற வழக்குரைஞர்" என அழைக்கபடுவார்

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்

🛞புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…! உலகிலேயே அழகா...