Monday, February 24, 2020

மனிதனைப் போல எந்த மிருகமும் சாப்பிடுவதில்லை.

ஒவ்வொரு மிருகத்திற்கும் அதுவாக தேர்ந்தெடுத்த உணவிருக்கும்.
 நீங்கள் எருமை மாட்டைப் பிடித்துத் தோட்டத்தில் விட்டால், அது ஒரு குறிப்பிட்ட புல்லைத்தான் தின்னும்.

 அவை எதையும் எல்லாவற்றையும் தின்று கொண்டே இருக்காது. அவை தேர்ந்தெடுக்கும்.

 அவைகளுக்கு உணவைப் பற்றி சில குறிப்பிட்ட உணர்வுகள் இருக்கும்.
 மனிதன் முழுமையாகத் தொலைத்துவிட்டான். அவனுக்கு உணவைப் பற்றி உணர்வே கிடையாது.

 அவன் எதையும், எப்போதும் தின்று கொண்டே இருப்பான். உண்மையில் நீங்கள் எங்காவது, எதையாவது மனிதன் சாப்பிடாததைக்  கண்டு பிகிக்கவே முடியாது. சில இடங்களில் அவர்கள் எறும்பை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில், பாம்புகளை சாப்பிடுகிறார்கள். சில இடங்களில் நாய்களை சாப்பிடுகிறார்கள். மனிதன் எல்லாவற்றையும் சாப்பிடுகிறான். மனிதனுக்குப் பைத்தியம். அவன் உடலோடு என்ன எதிரொலிக்கிறது என்பது தெரியாது. இல்லாதது தெரியும். அவன் முற்றிலுமாகக் குழம்பிப் போயிருக்கிறான். மனிதன், இயற்கையிலேயே ஒரு சைவமாகத்தான் இருக்க வேண்டும். காரணம் முழு உடலுமே சைவத்திற்காக உருவாக்கப்பட்டதுதான். ஒவ்வொரு விஞ்சானியும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்கிறார்கள். மனித உடலின் முழு அமைப்புமே அவன் அசைவமாக இருக்கக்கூடாது என்பதைத்தான் காட்டுகிறது.

 மனிதன் குரங்கிலிருந்து வந்தவன். குரங்குகள் சைவம். சுத்த சைவம். டார்வின் உண்மையென்றால் மனிதன் சுத்த சைவமாகத்தான் இருக்க வேண்டும். இப்போது சில மிருகங்கள் சைவமா அசைவமா என்பதைப் பார்க்க வழிகள் இருக்கின்றன. அது குடலைப் பொறுத்தது. குடலின் நீளத்தைப் பொறுத்தது. அசைவ மிருகங்களுக்கு சின்ன குடல் இருக்கும். புலிகள், சிங்கம் இவற்றிற்கு சின்ன குடல்தான். அதற்கு காரணம் மாமிசம் என்பது ஏற்கனவே ஜீரணக்கிப்பட்ட உணவுதான். அதற்கு ஜீரணத்திற்கு நீண்ட குடல் தேவையில்லை. ஜீரண வேலையை அந்த மிருகமே செய்துவிடும். இப்போது நீங்கள் மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடப் போகிறீர்கள். அது ஏற்கனவே ஜீரணம் அனைத்து. பெரிய குடல் தேவையில்லை. மனிதனுக்குத்தான் மிக நீளமான குடல்கள். அதாவது மனிதன் சைவம். ஒரு நீண்ட ஜீரணம் தேவை, அதில் தேவையற்றது நிறைய இருக்கும். அவற்றைத் தூக்கியெறிய வேண்டும். 

                 மனிதன் அசைவமில்லை. ஆனாலும் அவன் மாமிசத்தைத் தின்று கொண்டேயிருக்கிறான். உடலுக்கு சுமை ஏற்றப்படுகிறது. கிழக்கில், பெரிய தியானிகள் -- புத்தர், மகாவீரர் -- அவர்கள் இந்த உண்மையை வலியுறுத்தியிருக்கிறார்கள். அகிம்சை என்ற கொள்கையினால் அல்ல. அது இரண்டாம் பட்சம். ஆனால் நீ உண்மையிலேயே ஆழ்ந்த தியானத்திற்கு நகர வேண்டுமானால், உங்கள் உடல் எடையற்று இருக்க வேண்டும். இயற்கையாக நகர வேண்டும். உங்கள் உடலிலிருந்து பாரம் இறங்க வேண்டும். அசைவ உணவினால் உடலுக்கு அதிக பாரம். 

                நீங்கள் மாமிசம் சாப்பிடும்போது என்னவாகிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு மிருகத்தைக் கொள்கிறீர்கள். அந்த மிருகத்திற்கு என்னவாகிறது. அது கொல்லப்படும்போது? யாருமே கொல்லப்படுவதை விரும்பமாட்டார்கள். வாழ்க்கை அதுவாகவே நீளத்தான் ஆசைப்படுகிறது. விரும்பி தானாகவே எந்த மிருகமும் சாவதில்லை. உங்களை யாராவது கொன்றால், நீங்கள் விரும்பி சாக மாட்டீர்கள். ஒரு சிங்கம் உங்கள் மீது பாய்ந்து உங்களைக் கொள்கிறது. உங்கள் மனதிற்கு என்ன ஆகும்? நீங்கள் ஒரு சிங்கத்தைக் கொன்றாலும் அதேதான் ஆகும். வேதனை, பயம், மரணம், வருத்தம், கவலை, கோபம், வன்முறை, சோகம், எல்லாமே அந்த மிருகத்திற்கு ஏற்படும். அதன் உடல்முழுவதும் வன்முறை, வேதனை, மரண ஓலம் பரவும். அந்த உடல் முழுவதுமே கழிவுகள், விஷம். உடலின் சுரப்பிகள் விஷத்தை வெளியேற்றுகிறது. காரணம், அந்த மிருகம் விருப்பமில்லாமல் சாகிறது. பிறகு நீங்கள் அதன் மாமிசத்தை சாப்பிடுகிறீர்கள். அந்த மாமிசத்தில் அந்த மிருகம் வெளியேற்றிய அத்தனை விஷமும் இருக்கிறது. அந்த முழு சக்தியுமே விஷம்தான். பிறகு அந்த விஷம் உங்கள் உடலுக்கு ஏற்றப்படுகிறது.

         நீங்கள் சாப்பிடும் அந்த மாமிசம் ஒரு மிருக உடலுக்குச் சொந்தமானது. அதற்கு அதில் ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு. ஒரு குறிப்பிட்ட விதமான உணர்வு அந்த மிருக உடலில் இருந்தது. நீங்கள் அந்த மிருக உணர்விலிருந்து சற்று உயர்ந்த தளத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் அந்த மிருகத்தின் மாமிசத்தை சாப்பிடும்போது நீங்கள் தாழ்ந்த தளத்திற்கு வருகிறீர்கள். பிறகு உங்கள் உடலுக்கும், உங்கள் உணர்விற்கும் ஓர் இடைவெளி இருக்கிறது. ஒரு பதற்றம் எழுகிறது. ஒரு மன வேதனை எழுகிறது.

                  எது இயற்கையானதோ அதைத்தான் ஒருவர் உண்ணவேண்டும். உங்களுக்கு எது இயற்கையோ அதை. பழங்கள், பருப்புகள், காய்கறிகள், எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடுங்கள். அதில் அழுகு என்னவென்றால் இவற்றைத் தேவைக்கு மேல் நீங்கள் சாப்பிடவே முடியாது. எது இயற்கையானதோ அது உங்களுக்கு ஒரு திருப்தியைக் கொடுக்கும். அது உடலுக்கு ஒரு நிறைவை கொடுக்கும். அது உங்களுக்கு ஒரு செறிவைக் கொடுக்கும். நீங்கள் நிறைந்ததாக உணர்வீர்கள்...

Thursday, February 20, 2020

*அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா?*

*சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்க ல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய  அளவு கோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவே தான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.*

*கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு  பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறி வந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.*

*தமிழகம் முழுவதும் உள்ள 574 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே  சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள்  ஏற்ப ட்டுள்ளன.*

*பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவண ங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்திவரும் வாசகங்களில் இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன் னமும் புரியாதவையாகவே உள்ளன .*

*இதில், ஆவணங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின் விளக்கங்களும் பின்வருமாறு:*

*பட்டா:*

*ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.*

*சிட்டா:*

*குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.*

*அடங்கல்:*

*நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.*

*கிராம நத்தம்:*

*ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.*

*கிராம தானம்:*

*கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.*

*தேவதானம்:*

*கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.*

*இனாம்தார்:*

*பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.*

*விஸ்தீரணம்:*

*நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.* 

*ஷரத்து:*

*பிரிவு.*

*இலாகா:*

*துறை.*

*கிரயம்:*

*நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்துதல்.*

*வில்லங்க சான்று:*

*ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்துகொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.*

*புல எண்:*

*நில அளவை எண்.*

*இறங்குரிமை:*

*வாரிசுரிமை.*

*தாய்பத்திரம்:*

*ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம்  இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.*

*ஏற்றது ஆற்றுதல்:*

*குறித்த வகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.*

*அனுபவ பாத்தியதை:*

*நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.*

*சுவாதீனம் ஒப்படைப்பு:*

*நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.*

*ஜமாபந்தி:*

*வருவாய் தீர்வாயம்.*

*நன்செய் நிலம்:*

*அதிக பாசன வசதிகொண்ட நிலம்.*

*புன்செய் நிலம்:*

*பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.*

*குத்தகை:*

*ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில  நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது. இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர். 23 வகை மாதிரி ஆவணங்கள் ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதுதொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இதை ஏற்ற, சொத்து விற்பனை , அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23வ கையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.*

*பதிவுதுறையின் www.tnreginet.netஎன்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.*

Sunday, February 2, 2020

கும்பகோணத்தில் எந்தெந்த கோயிலுக்குச் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்

*⚜கும்பகோணத்தை சுற்றினால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது ஐதீகம்.*

கோவில் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கும்பகோணம் தான். தமிழகத்தில் அதிகப்படியான கோயில்களை கொண்ட ஒரு மாநகரம் என்றால் அது கும்பகோணம் தான்.

இங்கு பல்வேறு விதமான கோவில்கள் உள்ளன. அதிலும் நவக்கிரகங்கள் கொண்ட கோவில்கள் மிகவும் அதிகம்.

அதிகப்படியானோர் இந்த பகுதிக்கு தோஷங்களை நீக்க மற்றும் திருமண தடைக்கு இலக்கு வேண்டி வருகின்றனர்.

இதனால் தான் இது கோவில் நகரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் எந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்

*⚜கும்பகோணம் திருக்கோயில்கள் "கருமுதல் சதாபிஷேகம்" வரை பலனடைய இந்த கோவில்களை மட்டும் வழிபட்டால் போதும்.*

• 🔯கரு உருவாக  (புத்திரபாக்கியம்) -              கருவளர்ச்சேரி.

•🔯 கரு பாதுகாத்து சுகப்பிரசவம் பெற -  திருக்கருக்காவூர்.

• 🔯நோயற்ற வாழ்வு பெறுவதற்கு -  வைத்தீஸ்வரன் கோவில்.

• 🔯ஞானம் பெற - சுவாமிமலை.

• 🔯கல்வி மற்றும் கலைகள் வளர்ச்சிக்கு - கூத்தனூர்.

• 🔯எடுத்த காரியம் வெற்றி மற்றும் மனதைரியம் கிடைக்க - பட்டீஸ்வரம்.

• 🔯உயர் பதவியை அடைய - கும்பகோணம் பிரம்மன் கோயில்.

•🔯 செல்வம் பெறுவதற்கு - ஒப்பிலியப்பன் கோவில்.

• 🔯கடன் நிவர்த்தி பெற - திருச்சேறை சரபரமேஸ்வரர்.

• 🔯இழந்த செல்வத்தை மீண்டும் பெற - திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி.

• 🔯பெண்கள் ருது ஆவதற்கும்,
ருது பிரச்சினைகள் தீர - கும்பகோணம் காசி விஸ்வநாதர் (நவ கன்னிகை).

•🔯 திருமணத்தடைகள் நீங்க - திருமணஞ்சேரி.

•🔯 நல்ல கணவனை அடைய -  கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் மங்களாம்பிகை.

•🔯 மனைவி, கணவன் ஒற்றுமை பெற - திருச்சத்திமுற்றம்                    குழந்தைபாக்கியத்திற்கு.இரட்டை லிங்கேஸ்வரர்.சென்னியமங்கலம்.திப்பிராஜபுரம் 

• 🔯பில்லி சூனியம் செய்வினை நீக்க - அய்யாவாடி ஸ்ரீ பிரத்தியங்கிர தேவி.

• 🔯கோர்ட்டு வழக்குகளில் நியாயம் வெற்றியடைய - திருபுவனம் சரபேஸ்வரர்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜
• பாவங்கள் அகல - கும்பகோணம் மகாமகத் திருக்குளத்தில் நீராடல்.

• எம பயம் நீங்க - ஸ்ரீ வாஞ்சியம்.

• நீண்ட ஆயுள் பெற - திருக்கடையூர்.

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்

🛞புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…! உலகிலேயே அழகா...