உங்களுக்கு நரேந்திர மோதி மீது விமர்சனங்கள் இருக்கலாம்...
மோதிதான் இந்தியாவின் ஆக மோசமான பிரதமராக கூட இருக்கலாம்...
ஆக சகிப்புத்தன்மை இல்லாத முதல்வராக அவரது குஜராத் வரலாறு தெரியலாம்...
பல மாதங்களாக அவர் காஷ்மீரை தனிமைப்படுத்தி வைத்திருப்பதை கண்டு கோபப்படுங்கள்..
பலலட்சம் வட இந்தியரை இந்த ஊரடங்கிலும் நடையாய் நடக்க விட்டு சாகடிப்பதற்காக விமர்சியுங்கள்....
அவர் கோடிகளை கார்பரேட்டுகளுக்கு கொடுத்துவிட்டு நம்மிடம் கையேந்தும் போது
பட்டேல் சிலையை கயலான் கடையில் போடு என்ற மீம்ஸூகளை ஏற்க முடியவில்லை
சர்தார் வல்லபாய் படேல் பிரதமராக இருந்திருந்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு அப்போதே தீர்வு ஏற்பட்டிருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை உங்களுக்கு அவரையும் ஒரு சங்கியாக யோசிக்க வைக்கிறது..
வரலாறு இதுதான்........
இந்தியாவின் சுதந்திர தினம் நெருங்கி வந்துக் கொண்டிருந்த வேளை அது. அமைச்சரவையை எப்படி அமைக்கலாம் என்ற ஆலோசனைகள் மும்முரமாக இருந்த சமயத்தில், 1947 ஆகஸ்ட் முதல் நாளன்று படேலுக்கு கடிதம் எழுதினார் நேரு.
"ஓரளவு சம்பிராதயங்கள் கடைபிடிக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் உங்களை சேர்த்துக் கொள்வதற்கான முறையான அழைப்பு விடுப்பதற்கான கடிதம் இது. இந்த கடிதத்திற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது, ஏனெனில் நீங்கள் நம் அமைச்சரவையின் வலுவான தூண்."
நேருவின் இந்தக் கடிதத்திற்கு படேல் ஆகஸ்ட் மூன்றாம் தேதியன்று பதில் எழுதினார், ''அமைச்சரவையில் இணைவதற்கான அழைப்பு விடுத்த உங்கள் கடிதத்திற்கு நன்றி. நம் இருவருக்கும் இடையிலான பாசமும் அன்பும் 30 ஆண்டுகளாகத் தொடர்கிறது. நம்மிடையே சம்பிரதாய நடைமுறைகளுக்கு எந்தவிதமான அவசியமும் இல்லை.''
கடிதத்தில் படேல் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறார், "எனது வாழ்வின் எஞ்சியுள்ள காலம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். உங்களைப் போன்ற தியாகத்தை வேறு யாரும் செய்ததில்லை, நாட்டின் லட்சியத்தை நிறைவேற்ற அப்பழுக்கற்ற முழுமையான விசுவாசத்தை காட்டுவேன்."
"நமது நட்பையும் ஒற்றுமையையும் யாராலும் பிரிக்க முடியாது, சக்தி வாய்ந்த நம்முடைய உறவு வலுவானது. கடிதத்தில் நீங்கள் வெளிப்படுத்திய அன்புக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்..." என்று இளகிய நெஞ்சுடன் கடிதம் எழுதினார் இரும்பு மனிதர்.
படேலின் உணர்வுகள் வெறும் சம்பிரதாயமானவையோ, வெற்று வாய்ச்சவடால்களோ அல்ல. படேல் இறப்பதற்கு சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன் நேருவை பற்றி அவர் சொன்னது மரண சாசனத்திற்கு சமமானது.
1950, அக்டோபர் இரண்டாம் தேதியன்று இந்தோரில் ஒரு பெண்கள் மையத்தின் திறப்பு விழாவுக்கு சென்ற படேல் அங்கு உரையாற்றியபோது, ''இப்போது மகாத்மா காந்தி நம்முடன் இல்லை, அவர் தன்னுடைய பிரதிநிதியை நியமித்து அதனை அறிவித்தும் விட்டார். காந்தியின் சீடர்கள் அவர் சொன்னதை அடியொற்றி நடக்கவேண்டும்.''
நேருவிற்கும் படேலுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றாலும், இருவரும் எதிரிகள் இல்லை என்பதும் உண்மையே. படேல் யதார்த்தவாதி என்றால், நேரு கனவு காணும் அரசியல்வாதி. படேல் அமைப்பின் மீது பிடிப்பு கொண்டவர். ஆனால் நேருவிற்கு தேசிய அளவில் இருந்த புகழ் இரும்பு மனிதருக்கு இல்லை.
இருவரும் காந்தியின் சீடர்களே. நேருவே பிரதமராக பதவியேற்று நாட்டை வழிநடத்த வேண்டும் என்று முடிவு செய்தார் காந்தி. நேருவின் கண்ணோட்டம், விஷயங்களை அவர் அணுகும் முறை மற்றும் உலக அளவில் அவருக்கு இருந்த அங்கீகாரத்தை கருத்தில் கொண்டே காந்தி இந்த முடிவை எடுத்தார்.
காங்கிரஸார் படேலின் குடும்பத்தினரை மறந்து விட்டதாகவும், ஆனால் நேருவின் பரம்பரை, ஆட்சிப் பொறுப்பில் தொடர்வதாகவும் மற்றொரு பிரசாரம் கூறுகிறது. இதில் உண்மை எள்ளளவும் கிடையாது
உண்மையில், நேரு உயிருடன் இருந்த காலத்தில் தனது ஒரே வாரிசான இந்திரா பிரியதர்ஷினியை ஆட்சிப் பொறுப்பில் அமரவைக்கவில்லை. நேருவின் உதவியாளராகவே இந்திரா செயல்பட்டார்.
ஆனால் 1950இல் சர்தார் படேல் இறந்த பிறகு, நேரு படேலின் பிள்ளைகள் குறித்து அக்கறை எடுத்துக் கொண்டார். இந்திராவின் மீது காட்டிய அதே அக்கறையை, சர்தார் படேலின் மகள் மணிபென் படேல் மீதும் நேரு காட்டினார். 1952க்கு முன்னரே பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் நேரு.
மணிபென் படேல் தெற்கு கைரா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். 1957இல் ஆனந்த் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் காங்கிரஸ் அவரை மாநிலங்களவைக்கு அனுப்பியது.
1953 முதல் 1956 வரையிலான காலகட்டத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி செயலரகவும் 1957 முதல் 1964 வரை குஜராத் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார் அவர்.
நேருவின் காலகட்டத்தில் காங்கிரஸில் மணிபென் படேலுக்கு மிகுந்த மரியாதை வழங்கப்பட்டது. அதேபோல் வல்லபாய் படேலின் மகன் தஹ்யாபாய் படேலுக்கும் காங்கிரஸ் சிறப்பான மரியாதையை வழங்கியது.
1957 மற்றும் 1962இல் நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1973 முதல் தனது வாழ்நாள் இறுதிவரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மணிபென் மற்றும் தஹ்யாபாய்க்குக் வாய்ப்பு வழங்கப்பட்டபோது உன்மையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.
அதாவது சர்தார் படேலின் மகனும், மகளும் ஒரே சமயத்தில் மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் அனுப்பப்பட்டனர்.
படேல் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் விவகாரத்தில் ஒரு முடிவு கிடைத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது படேல் ராணுவ பலத்தை பயன்படுத்தி காஷ்மீரை இந்தியாவின் அங்கமாக்கியிருப்பார், நேருவின் `தாராள மனப்பான்மை` அதை தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
உண்மை என்னவென்றால், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370ஐ வடிவமைத்தவர்களில் முக்கியமானவர் சர்தார் படேல்.
சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியான இந்தியாவின் இரும்பு மனிதர் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவை கட்டமைத்த தூண்களில் ஒருவர்.
மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, 1948 பிப்ரவரி நான்காம் தேதியன்று, ஆர்.எஸ்.எஸ் சட்டவிரோத அமைப்பு என்று அறிவித்தவர்
' பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், கொள்ளை போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர். அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாகவே உள்ளன,' என்றும் அறிவித்தார். காந்தியின் படுகொலையை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடியதைக் கண்டு பொருமியவர்
ஆர்.எஸ்.எஸ்ஸின் உதவி இல்லாமல் காந்தி கொலை செய்யப்பட்டிருக்க முடியாது என்றும் நிரம்பியவர்..
ஆனால் இப்படிப்பட்ட ஒரு அமைப்பின் மீதான தடையை நீக்கியதற்கு ஜனநாயகம் என்ற நடுநாயகம் தான் காரணம். அதோடுகூட, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அறிவுறுத்தலும் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.
தனக்கும் நேருவுக்கும் இடையில் பகைமை இருப்பதாக கூறப்படுவதை தொடர்ந்து மறுத்துவந்தார் சர்தார் படேல். அவர் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகவே பேசினார், ''நாடு எதிர்கொண்டிருக்கும் அனைத்து பிரச்ச்சனைகளிலும் நான் பிரதமருடன் உறுதுணையாக நிற்கிறேன். நாங்கள் இருவரும் எங்கள் தலைவர் மகாத்மா காந்தியின் பாதத்தில் அமர்ந்து பாரதத் தாயின் விடுதலைக்காக பாடுபட்டோம். இன்று மகாத்மா நம்முடன் இல்லை. இந்த நிலையில் நாங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவதைப் பற்றி சிந்திக்கக்கூட மாட்டோம்.''
படேல் நாட்டின் முதல் பிரதமராகும் வாய்ப்பை நேரு தட்டிப் பறித்தார் என்று சங்க பரிவாரம் கூறுவது போல படேல் நினைக்கவில்லை என்பதை அவரே பலமுறை சொல்லிவிட்டார். சர்தார் வல்லபாய் படேல், சாவர்கர் விரும்பிய இந்தியாவை அல்ல, மகாத்மா காந்தி கனவு கண்ட உன்னத பாரதத்தை உருவாக்கவே நினைத்தார்.
இந்தியாவை 'இந்து நாடாக' மாற்றும் எண்ணத்தை 'பைத்தியக்காரத்தனம்' என்று வல்லபாய் படேல் வெளிப்படையாகவே விமர்சித்தார்,
இத்தகைய உயர்ந்த வரலாற்றுக்கு சொந்தகாரர் பட்டேல்
உயரமானவருக்கான உயரமான சிலை பெருமைக்குரியது...
அதை மூன்று லட்சம் கோடி செலவிட்டு கட்டியிருந்தாலும் தகும்...
தயை கூர்ந்து மோதியை
விமர்சிக்க பட்டேலை அவமான படுத்தாதீர்...
அவர் நம் வரலாற்று நூல்களில் பெருந்தடம் பதித்தவர்...
நம் நினைவு சின்னமாய்
சிலையாய் உயர்ந்து நிற்க தக்கவர்...
புகழ் மாலையிட வேண்டியவரை
இஷ்டத்திற்கு பேசுவது...
தந்தை பெரியாரை சங்கிகள் பேசுவது போலாகி விடும்
(படத்திலிருப்பது நாடாளுமன்றதிற்குள் நேரு வைத்த பட்டேலின் திருவுரு)
Courtesy
Adv. Prof.Mr.kennady sir