ஒரு போதும் அசைவம் மது தொடக் கூடாது;
குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் உபாசனா தெய்வம் இஷ்ட தெய்வம் கால தேவன் என்ற மஹா கால பைரவரை அல்லது ஸ்ரீ வராகி அன்னையை உபாசனை செய்வது நன்று;
ஒவ்வொரு அமாவாசை அன்றும் காலை 11.30 முதல் மதியம் 12.30 க்குள் திருச்செந்தூர் கடலில் குளிக்க வேண்டும்;இதன் மூலமாக நமக்கு நவக்கிரகங்களால் தீங்கு நெருங்காது;;
அல்லது
ஒவ்வொரு தேய்பிறை சிவராத்திரி அன்றும் திருவண்ணாமலை கிரிவலம் வர வேண்டும்;
பல ஜோதிடர்களுக்கு இந்த வழிமுறை தெரியவில்லை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தினமும் ஜோதிடம் பார்த்தால் அவர்களின் உடலில் தீராத எரிச்சல் உண்டாகும் பிறருக்கு ஜோதிட ஆலோசனை சொல்வது புண்ணியம் தான் தன்னை கர்மாவில் இருந்து காக்க வேண்டாமா
உங்கள் வாழ்நாளில் குறைந்தது 12 பேர்களுக்கு ஜோதிடம் சொல்லி கொடுங்கள் குரு தட்சிணை வாங்கிக் கொண்டு தான் இலவசமாக சொல்லி தர வேண்டாம்;
மஹா கால பைரவர் எட்டு இடங்களில் சிவலிங்க வடிவத்தில் அருள் ஆட்சி புரிந்து வருகின்றார் ஜோதிடராக இருப்பதால் ஒரு முறையாவது இந்த அட்டவீரட்ட திருத்தலங்களுக்கு சென்று வருவது கடமை ஆகும்;
மாதம் ஒரு செவ்வாய் கிழமை திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும் இதன் மூலமாக ஜோதிடர்களின் வாக்கு பலிதம் அதிகரிக்கும்
குல தெய்வ வழிபாட்டினை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துங்கள்;
ஒவ்வொரு அமாவாசை திதி இருக்கும் போதும் ஒவ்வொரு வளர்பிறை பஞ்சமி திதி இருக்கும் போதும் குலதெய்வம் கோவிலுக்கு சென்று மனம் உருகி வேண்டுபவர்கள் அனைத்து வளங்களும் ஆசிகளும் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்;