Tuesday, October 13, 2020

மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்

 1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. 

3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால்  கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல்  பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும். 

4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின்  சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள்.
இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.  

5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.

6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

7.அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.

8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும். 

8.மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

9.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை. 

10.அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும். 

13.வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம்.சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட  கோவில்

14. தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம்.சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

15. இவளின் அண்ணன் மாயவன் அழகர்மலை அழகுமலையான்.உலக அதிசியங்களுள் ஒன்று அன்னையின் ஆலயம். இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாட்சி அம்மா போற்றி போற்றி போற்றி....

Sunday, October 11, 2020

IAS தேர்வு என்றால் என்ன ?

IAS மற்றும் IPS உள்ளிட்ட 
24 பணிகளுக்காக 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

*F.A.Q*
*IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?*
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

*IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?*
குறைந்தபட்ச வயது : 
21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
அதிகபட்ச வயது : பொதுப்பிரிவினர் 
(GENERAL) : 32
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35
ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37.

*ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?*
பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited)

*ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?*
சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு
ஆளுமை அதிகாரம்
பெருமதிப்பிற்குரிய பணி
சமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை
மேலும் பல…..

*IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?*
இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

*IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?*
முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

*IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?*
இல்லை.
ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.
*என்னால் முடியுமா ?*
கண்டிப்பாக முடியும்.
இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.
ஆனால் உண்மையான போட்டியாளர்கள் ஆயிர கணக்கில் மட்டுமே.

உண்மையான போட்டியாளர்கள் 
என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன்,
தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..❗
*IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?*
*தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?*
இல்லை.
IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.
அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

*IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?*
IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.
அது ஓர் போட்டித் தேர்வு.
ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

*IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?*
முற்றிலும் தவறான கருத்து.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

*IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?*
இல்லை.
அப்படி எதுவும் இல்லை.. 
நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.
அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்
தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்
வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்
சரியான திட்டமிடல்
திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்
மாதிரித் தேர்வுகள் எழுதுதல்
சரியான வழிகாட்டல்
இறுதியாக முழு நம்பிக்கையோடுj இருத்தல்
இவை அனைத்தும் இருந்தால் நீங்களும் 
ஒரு IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்..I
தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Monday, October 5, 2020

திருப்பாதாளேஸ்வரர்

திருப்பாதாளேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது.

*திருடு போன பொருட்களை மீட்க உதவும் பைரவர்*

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது துர்வாசபுரம் என்ற திருத்தலம். இங்கு திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. 

பொது மக்களால் இக்கோவில், ‘பாதாளேஸ்வரர் கோவில்’ என வழங்கப்பெற்றாலும், ஆலயத்திற்குள் ‘சுந்தரேஸ்வரர் திருக்கோவில்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆலயத்தில் உள்ள அம்பாளின் திருநாமம் பாகம்பிரியாள் என்பதாகும். 

முற்காலத்தில் இந்த அம்மனை ‘சகஜரி நாயகி’ என்று அழைத் திருக்கிறார்கள். 

திருமணத்தடையால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இறைவியை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். 

அப்படி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பெண்கள், தம்பதி சமேதராக இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்திச் செல்கின்றனர். 

இத்தல பைரவர் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரிடம் குழந்தைகளுக்காக பூஜை செய்வது மிக, மிக சிறப்பு. 

அவர்களின் ஆரோக்கியம், கல்வி நலுனுக்காக தனியாக பூஜை செய்ய வேண்டும். 

இத்தல பைரவர் மிகவும் உக்கிரமானவர் என்பதால், பைரவருக்கு ஆராதனை செய்த கற்பூர ஆரத்தியை பக்தர்களுக்கு தருவதில்லை. 

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை சஷ்டி விழாவாக கொண்டாடுவது போல், இத்தல பைரவர், சம்பாசுரனை வதம் செய்த நிகழ்வு ‘சம்பா சஷ்டி விழா’ என்ற பெயரில் கார்த்திகை மாதத்தில் நடத்தப்படுகிறது.

பைரவர் சன்னிதியில் பூசணிக்காயை பாதியாக வெட்டி, உள்ளே உள்ள விதை முதலியவற்றை நீக்கி, அகல் போல் ஆக்கி, அதனுள் நல்லெண்ணையை நிரப்பி, நூல் திரிகளை வைத்து விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் ஏற்படும் பில்லி- சூனியங்கள், மாந்திரீகள் எல்லாம் நீங்கிவிடுமாம். 

அதேபோல் கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. 

ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கே வந்து சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச் சிறப்பாகும்.

மேலும் விவரங்களுக்கு சொடுக்கவும்....

https://temple.dinamalar.com/en/new_en.php?id=317

Sunday, October 4, 2020

மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் !

ழைக்காலத்தில் வரும் பல்வேறு நோய்களால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.எனவே குழந்தைகளை எப்போதுமே கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.அதுவும் மழைக் காலம் என்றால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் போன்ற அனைத்தும் வர ஆரம்பித்துவிடும்.  நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருப்பது குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான்.

இதற்குக் காரணம்.ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளாகும். 

ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி  மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி  வரலாம்.
காது,மூக்கு,தொண்டை வியாதிகள்

மழைக்காலங்களில் டான்சில் மற்றும் சைனஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும். தினமும் உப்பு கலந்த வெந்நீரால் தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும்.குளிர்ந்த காற்று முகத்தில் படாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மழை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

சூப்

மழை பெய்யும் போது சூடாக சூப் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றுகையில், நூடுல்ஸ் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் சூப் செய்து குடித்தால், உடலில் சத்துக்களின் அளவை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

ஜீரகம்

மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும்.மேலும் 

உண்ணும் உணவுகள் செரிமானமாகாமலும் இருக்கும். எனவே உங்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், செரிமான மண்டலம் சீராக இயங்கவும், சீரகத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

இஞ்சி டீ

தினமும் டீ குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் அதில் சிறிது இஞ்சியை தட்டி போட்டு கொதிக்க வைத்து பின் வடிகட்டி குடித்தால் சளியினால் ஏற்படும் தொந்தரவு நீங்கும்.

மஞ்சள்

மஞ்சள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புத் தரும். எனவே மஞ்சளை அனைத்து உணவிலும் சேர்ப்பதோடு, தினமும் இரவில் சூடான பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.

மேலும்  பால அமிர்தம் என்னும் நம் பராம்பரிய மருந்துகளை கொன்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேத அரு மருந்து 
சளி .காய்ச்சல் ஜலதோசம் போன்ற தொல்லைகளுக்கு நிவாரணம் கொடுக்கின்றது.

நந்தி தேவர்- சிவாயநம

 சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது. அதுவிடும் மூச்சுக்காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.

  ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன்- இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.

   திவ்ய வடிவமும், நெற்றிக் கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பு உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானை புரியும், இருபுயங்களில் மானும் மழுவும் கொண்டு இன்னுமொரு சிவரூபனாகவே திகழும் நந்தியின் கதைதான் என்ன?

#சிலாதர்கண்டெடுத்தசிவக்குழந்தை

  வீதஹவ்யர் என்ற பெயர் கொண்ட முனிவர், தம் சிறு வயதில் சிவனடியார் ஒருவரின் அன்னப் பாத்திரத்தில் விளையாட்டாக கல்லைப் போட்ட தீவினையால், இறந்த பிறகு பெரும் பாறை ஒன்றைத் தின்று தீர்க்க வேண்டும் என்ற தண்டனை இருப்பதை யமதூதர்கள் மூலம் முன்னரே அறிந்து, இறப்பதற்கு முன்னரே பாறையைத் தின்று தன் பாவம் போக்கிக்கொண்டவர். ஆதலால்தான் இவருக்கு “சிலாத முனிவர்’ என்ற பெயர் வந்தது.

   திருமணம் முடிந்து பிள்ளை பெற்று பிதுர்க்கடனை நிறைவேற்ற சிலாத முனிவர் தவறியதால், அவரின் முன்னோர் நரகத்தில் உழன்று கொண்டிருந்தனர். இதனால் வருந்திய சிலாத முனிவர் சித்திரவதி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டும் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லை. கலக்கமுற்ற சிலாத முனிவர் இந்திரனின் ஆலோசனைப்படி ஸ்ரீ சைலமலை சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முற்பட்டபோது, தங்கப் பெட்டியில் சிவரூப சுந்தரனாக குழந்தையொன்றைக் கண்டெடுத்தார். அந்தக் குழந்தையே நந்தியெம் பெருமானாவார். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். சிலாதரின் கவலையைப் போக்கி மகிழ்ச்சி உண்டாக்கும் விதம் கிடைத்தவர் ஆதலால் நந்தி என்று அவருக்குப் பெயரிட்டார் சிலாதர்.

#நந்தியின்தவமும்  #ஈசன்தந்தபட்டமும்
——————————————————-
    சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார் நந்தி. இந்நிலையில் சிலாதரின் இல்லத்துக்கு வருகை தந்த மித்ரன், வருணன் போன்றோர் நந்தியின் ஆயுள் இன்னும் ஒரு வருடமே என்று சிலாதரிடம் எடுத்துச் சொல்ல, மிக வருத்தம் கொண்டார் சிலாத முனிவர். நந்தி தன் தந்தைக்கு ஆறுதல் கூறிவிட்டு, சிவதவம் செய்யக் கிளம்பினார். முந்நூறு வருடங்கள் கடும் தவம் செய்தார் நந்தி. இறுதியாக அவரின் தவத்தினால் மகிழ்ந்த ஈசன், நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்தினார்.

   நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புதக் காட்சி ஒன்று நாகை மாவட்டம், ஆத்தூர் மந்தாரவனேசுவரர் ஆலய கோஷ்டத்தில்- கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்ப வடிவில் உள்ளது.

   தவம் செய்ததனால் நந்தியெம் பெருமான் சிவாலயங்கள்தோறும் வீற்றிருக்கும் பேறும், பிரதோஷ காலங்களில் வழிபடுவோருக்கு அருள் வரம் தரும் பேறும் கிடைக்கப் பெற்றார்.

   சிவபெருமான் இருக்குமிடம் கயிலாயம். சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும். எதையாவது செய்ய முடியாமல் யாராவது தடுத்தால், “இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்’ என்பார்கள். நந்தியின் வேலை தடுப்பதுதான்.

  முப்புரம் எரிப்பதற்காக சிவன் புறப்பட்டார். அப்போது அச்சு முறிந்தது. விஷ்ணு நந்தியாகி, தேரினைத் தாங்கினார். தர்மதேவதை சிவனுக்கு நந்தியானார். அந்த நந்திதான் சிவாலயத்தின் கர்ப்பக் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் நந்தியாகும். அந்த நந்திக்கும் மூலவருக்கு இடையில் குறுக்கே போகக் கூடாது என்பார்கள். தர்ம நந்தியின் மூச்சுக்காற்று மூலவர்மீது பட்டுக்கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.

Thursday, October 1, 2020

வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்

தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம்.

பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள்.

இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது.

இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று.

பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.

திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;  
திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;  
திரிஜன்ம பாப சம்ஹாரம்  
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

என்ற மந்திரத்தை உச்சரித்து உண்பது பெரியோர்களின் வழக்கம்.

வில்வத்தின் விஞ்ஞான குணம்:

ஆங்கிலத்தில் வில்வத்துக்கு ஆங்கில பெயர் Aegle marmelos.

ஒரு தேவதையைப் போல் அதீத சக்திகள் வாய்ந்தது இந்த மரம்.

வில்வ இலைகளில் சுழலும் எலெக்ட்ரான், தீட்சண்யமான அதிர்வலைகளை வெளியிட வல்லவை.

வில்வ இலைகளை, குறைந்தது பன்னிரெண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைப் பருகுவதால் உடலின் ஒவ்வோர் அணுவும் புத்துயிரூட்டப்படுகிறது.

வில்வ இலை நீருக்குள் செலுத்திய மின்காந்த அலைகள், நம் உடலுக்குள் புகுந்து செயல்படுவதே இதற்குக் காரணம்.

செப்புக்குவளையில் வைத்த நீரில் வில்வ இலையை ஊறப் போடும்போது, அதிர்வலைகளின் செயல்வேகம் மேலும் அதிகரிக்கிறது.

நிலத்தில் ஆழமாக வேரோடும் வில்வமரத்தின் வேர்கள், மண்ணைக் கவ்விப் பற்றி நிலச்சரிவு ஏற்படாமல் காக்கின்றன.

காலம்காலமாக மண்ணின் இறுக்கத்துக்குப் பெரிதும் உதவி உள்ளன வில்வ வனங்கள்.

மருத்துவ குணம்:

வில்வமரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.

வில்வ இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரில் குளித்து, சோப்பு போடாமல் பாசிப்பருப்புப் பொடி தேய்த்துக் கொண்டால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.

வில்வ இலைத் தளிர்களை லேசாக வதக்கி, இமைகளில் ஒத்தடம் கொடுக்க, கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.

வில்வ வேரை இடித்து ஒரு குவளை நீரில் கொதிக்கவைத்து, அதை காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து தினமும் உண்ணும் ஆண்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்

🛞புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…! உலகிலேயே அழகா...