மழைக்காலத்தில் வரும் பல்வேறு நோய்களால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.எனவே குழந்தைகளை எப்போதுமே கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.அதுவும் மழைக் காலம் என்றால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் போன்ற அனைத்தும் வர ஆரம்பித்துவிடும். நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருப்பது குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான்.
இதற்குக் காரணம்.ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளாகும்.
ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி வரலாம்.
காது,மூக்கு,தொண்டை வியாதிகள்
மழைக்காலங்களில் டான்சில் மற்றும் சைனஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும். தினமும் உப்பு கலந்த வெந்நீரால் தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும்.குளிர்ந்த காற்று முகத்தில் படாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
மழை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்
சூப்
மழை பெய்யும் போது சூடாக சூப் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றுகையில், நூடுல்ஸ் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் சூப் செய்து குடித்தால், உடலில் சத்துக்களின் அளவை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
ஜீரகம்
மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும்.மேலும்
உண்ணும் உணவுகள் செரிமானமாகாமலும் இருக்கும். எனவே உங்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், செரிமான மண்டலம் சீராக இயங்கவும், சீரகத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.
இஞ்சி டீ
தினமும் டீ குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் அதில் சிறிது இஞ்சியை தட்டி போட்டு கொதிக்க வைத்து பின் வடிகட்டி குடித்தால் சளியினால் ஏற்படும் தொந்தரவு நீங்கும்.
மஞ்சள்
மஞ்சள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புத் தரும். எனவே மஞ்சளை அனைத்து உணவிலும் சேர்ப்பதோடு, தினமும் இரவில் சூடான பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.
மேலும் பால அமிர்தம் என்னும் நம் பராம்பரிய மருந்துகளை கொன்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேத அரு மருந்து
சளி .காய்ச்சல் ஜலதோசம் போன்ற தொல்லைகளுக்கு நிவாரணம் கொடுக்கின்றது.