Thursday, January 3, 2019

சிறுநீரகம் பாதித்து இருப்பதற்கான அறிகுறிகள்

உடல் கூறும் சில அறிகுறிகளை நாம் உடனடியாக அக்கறை கொடுத்துப் பார்த்தால் பல உடல் பாதிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

சிறுநீரகம் பாதித்து இருப்பதற்கான அறிகுறிகள் உடல் கூறும் சில அறிகுறிகளை நாம் உடனடியாக அக்கறை கொடுத்துப் பார்த்தால் பல உடல் பாதிப்புகளிலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம். சில நேரங்கள் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் சிறுநீரகம் வரை கூட சென்றிருக்கலாம்.

* சிறுநீர் செல்லும் பொழுது அதில் ரத்தம் கலந்தார் போல் இருந்தால் கிருமிகளோடு உடல் நடத்திய போராட்டத்தில் ரத்த சிவப்பு அணுக்கள் சிறுநீரில் கலந்திருக்கலாம். அப்படி இருந்தால் சிறுநீரக உறுப்புகளில் இருக்கும் கிருமிகளை சரி செய்ய உடனடியாக மருத்துவரிடம் செல்லுங்கள்.

* அடிக்கடி சிறுநீர் செல்ல வேண்டும் போல் தோன்றுகின்றதா? சிறுநீரக பையில் கிருமிகள் தாக்குதல் இருந்தால் அந்த பாதிப்பினை ஏற்படுத்தும். அதனால் சிறுநீரக பை தன்னை சுருக்கிக் கொள்ளும். இதன் காரணமாகவே அடிக்கடி சிறுநீர் செல்லத் தோன்றும். பொதுவில் சிறுநீரக உறுப்பு கிருமி தாக்குதல் ஆண்களை விட பெண்களுக்கே சற்று அதிகமாக ஏற்படும். இது உடல் கூறு அமைப்பு காரணமாக ஏற்படுவது. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்தில் சிறுநீரக பை இறங்கும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாகவும் பாதிப்பு ஏற்படலாம்.

* கீழ்முதுகு வலி:- கிருமியால் பாதிக்கப்பட்ட சிறுநீரகம் வீங்கும். இதனால் கீழ் முதுகுவலி ஏற்படும்.

* சிறுநீர் செல்லும் பொழுது தாங்க முடியாத வலி இருக்கும். ஏனெனில் கிருமிகளால் சிறுநீரக உறுப்புகள், பாதை உள்ளிட்டவை வீங்கி இருக்கும்.

* சிறுநீர் ஒரு கலங்கிய திரவம் போல இருக்கலாம். உடல் வெள்ளை ரத்த அணுக்களை கிருமிகளோடு போராட அனுப்புவதால் அவை போராடி சிறுநீரில் கலப்பதால் கலங்கிய தோற்றம் இருக்கலாம்.

* சிறுநீர் அதிக துர்நாற்றத்துடன் இருக்கலாம்.

* சிறுநீரில் சீழ் இருக்கலாம்.

* மயக்கம் இருக்கலாம். கிருமி பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்கப்படாத பொழுது கிருமிகள் ரத்த குழாய்களை பாதிக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைந்து மயக்கம் ஏற்படலாம்.

* ஜுரம் இருக்கலாம்.

மேலும் உங்கள் சிறுநீரகம் பாதித்து இருந்தால் அதன் அறிகுறிகளாக

* திடீரென உடலில் மிக அதிக அரிப்பு, தடிப்பு ஏற்படலாம். நன்கு வேலை செய்யும் சிறுநீரகம் உடலில் உள்ள நச்சுக்களை கழிவுகளை வெளியேற்றி விடும். சிறுநீரக பாதிப்பு நிகழும் பொழுது இக்கழிவுகள் ரத்தத்தில் கூடி பாதிப்பினை ஏற்படுத்தும். இதன் வெளிப்பாட்டில் ஒன்றாக சருமத்தில் அதிக அரிப்பு, தடிப்பு ஆகியவை ஏற்படும். அதிக உப்பு சாப்பிடும் பழக்கம் சிலரிடம் இருக்கும். அதிக தாகம், உப்பிச உணர்வு, வீக்கம், இவை இருந்தால் நீங்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்கின்றீர்களா என்பதனை ‘செக்’ செய்யுங்கள்.

* உட்கார, நிற்க முடியாத வயிற்றுவலி இருந்தால் சிறுநீரக கற்கள் பாதிப்பு இருக்கின்றதா என்பதனை மருத்துவரிடம் சென்று அறியுங்கள். கூடவே வாந்தி, அதிக வியர்வை வயிற்றுப்பிரட்டல் இவையும் இருக்கலாம். இதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவை என்பதனை அறிய வேண்டும்.

* உயர் ரத்த அழுத்தம் உடலுக்கு மிக தீங்கு விளைவிக்கும். சிறுநீரகத்தின் ரத்த குழாய்கள் சிறுநீரை பிரித்து எடுக்கின்றன. உயர் ரத்த அழுத்தம் பெரிய குழாய்களில் இருந்தால் மிகச் சிறிய ரத்த குழாய்களிலும் இருக்கும். இதனால் சிறுநீரக மெல்லிய ரத்த குழாய்கள் பாதிப்படையும். எனவே உங்கள் ரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்திருங்கள் ..... இது போன்ற சிறுநீரகப் பிரச்சினைகள் இருப்பதால் அலோபதியில் சிறுநீரகத்தில் படிந்திருக்கும் உப்பை வெளியேற்ற டயாலிஷ் முறை பயன்படுத்தி வருகிறார்கள் இது மிகவும் ஆபத்தான ஒன்றாகும் . ஆனால் சித்தமருத்துவத்தில் படிப்படியாக டயாலிஷ் முறையை தவிர்த்து பழைய நிலைக்கு சிறுநீரகத்தை செயல்பட வைக்கும் மருந்துகள் உண்டு எனவே அதை பயன்படுத்தி பூரண குணமடைந்து வாழ்க வளமுடன்.

கை, கால் வீக்கமா? சிறுநீரகம் கழிவை வடிகட்ட முடியாத நிலையை அடையும் போது ஏற்படும் அறிகுறிகள் தெரியுமா?

கை, கால் வீக்கமா? சிறுநீரகம் கழிவை வடிகட்ட முடியாத நிலையை அடையும் போது ஏற்படும் அறிகுறிகள் தெரியுமா?


சிறுநீரக செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இரத்தத்தில் இருந்து வரும் கழிவை வடிகட்ட முடியாத நிலையை அடையும் போது சிறுநீரகம் செயலிழக்கிறது. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை குலைக்கும் பல காரணிகள் உண்டு . அவை நாள்பட்ட நோய்கள், சுற்றுப்புற சூழல் மாசு, நீர்ச்சத்து குறைபாடு போன்றவை. நாள்பட்ட சிறுநீரக நோய்களின் அறிகுறிகள் பொதுவானதாக இருப்பதால், இவை பெரும்பாலும் கவனிக்காமல் விடப்படுகின்றன. இப்போது நாம் இதன் அறிகுறிகளைப் பற்றி காண்போம்.

சோர்வாக உணர்வது :
ஆரோக்கியமான சிறுநீரகம் எரித்ரோஃபோய்டின் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த ஹார்மோன் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உடலுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது. சிறுநீரக செயலிழப்பு உண்டாகும்போது, இந்த ஹார்மோன் குறைவாக சுரக்கிறது. இதனால் போதிய சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகாமல் உடல் விரைவில் சோர்வடைகிறது.

சிறுநீரில் நுரை :
சிறுநீரகத்தில் ஏதாவது நோய் இருந்தால் சிறுநீரில் நுரை அதிகமாக தோன்றும். சிறுநீரக செயலிழப்பு உண்டாகும்போது சிறுநீர் நிறம் மாறி, நுரையாகத் தோன்றும். சிறுநீரில் அளவுக்கு அதிகமான புரதம் இருந்தாலும் இப்படி நுரை அதிகமான சிறுநீர் வெளியேறும்.

சுவாசப் பிரச்சினைகள்
சிறுநீரகம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளில் இரண்டு விதத்தில் சம்பந்தப்படுகிறது. உடலில் அதிக அளவு திரவம் வெளியேற்றப்படாமல் இருப்பதால் அவை நுரையீரலில் சென்று சேர்கிறது. மற்றொன்று , ரத்தசோகை ஏற்படுவதால் உடல் பிராண வாயுவிற்காக தவித்து மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது.

தலைசுற்றல் மற்றும் சோர்வு :
சிறுநீரக செயலிழப்பு தொடர்பான அனீமியா என்பது மூளைக்கு ஆக்ஸிஜன் போதுமானதாக இல்லை என்று பொருள். இதனால் மயக்கம், தலைசுற்றல், உடல் சோர்வு போன்றவை உண்டாகலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்குமானால் உடனடியாக மருத்துவரை அணுகுவதும் சிறுநீரக சோதனை செய்து கொள்வதும் நல்லது.

கை மற்றும் கால் பாதங்களில் வீக்கம் :
உங்கள் கைகளில் அல்லது கால் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டால், சிறுநீரக செயலிழப்பும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். செயலிழந்த சிறுநீரகத்தால் உடலில் உள்ள திரவத்தை வெளியேற்ற முடியாமல், அவை உடலில் தங்கி கை, கால் , பாதங்களில் வீக்கம் உண்டாகலாம்.


அரிப்பு :
இரத்தத்தில் இருந்து கழிவுகளை நீக்கும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. சிறுநீரகத்தில் பிரச்சனை உண்டாகும்போது, இரத்தத்தில் இருந்து கழிவுகள் வெளியேறாமல் இருப்பதால் உடலில் ஒருவித அரிப்பு உண்டாகலாம். சில நாட்கள் தொடர்ந்து இந்த அரிப்பு பிரச்சனைகள் தீராமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

முகத்தில் வீக்கம் :
முகத்தில் உண்டாகும் வீக்கம் கூட சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரகம் செயலிழந்தால் உடலில் உள்ள கழிவு கலந்த திரவம் வெளியேற முடியாமல் உடலில் தங்குகிறது . இத்தகைய, அளவுக்கு அதிகமான திரவ சேர்க்கையால் முகத்தில் வீக்கம் ஏற்படலாம். இது மிகவும் அசௌகரியமான நிலையை உண்டாக்கும். அதனால் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? ஆம் என்றால் உங்களுக்கு சிறுநீரக நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம். சிறுநீரக செயலிழப்பு உண்டாகும் போது, அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது அல்லது சிறுநீர் வெளியேறும்போது ஒரு வித சிரமம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

குமட்டல் :
குமட்டலும் சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாகும். சிறுநீரக செயலிழப்பால், உடலில் இருந்து நச்சுகள் வெளியேறாமல் இருக்கும். இதனால் இந்த நச்சுகள் உடலில் தங்கி சிறுநீரக பாதிப்பை உண்டாக்கி, செயலிழப்பை அதிகப்படுத்தும்.

வலிப்பு நோய் :
வலிப்பு நோயம் சிறுநீரக நோயின் அறிகுறியாகும். மூளையின் மின் செயல்பாடுகளில் உண்டாகும் மாற்றமே வலிப்பு நோய்க்குக் காரணம் ஆகும். இந்த மாற்றத்தால் உடல் மற்றும் தலையில் கட்டுப்படுத்த முடியாத வகையில் அசைவுகள் தோன்றும். இதனால் உடல் தன் கட்டுப்பாட்டை இழக்கும். இந்த அறிகுறியை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

குறிப்பு:- தகவல்கள் அறிவு நோக்கத்திற்காகவே பகிரப்படுகிறது. ஒரு வைத்தியரின் ஆலோசனை இல்லாமல், ஒரு உடல்நலப் பிரச்சினைக்கோ அல்லது நோயை கண்டறியவோ அல்லது சிகிச்சை செய்யவோ இந்த தகவல்களை நீங்கள் பயன்படுத்தக்கூடாது .......

உதடு வெடிப்புக்கு சிறந்த மருத்துவம்

உதடு வெடிப்புக்கு.

உதடுகள் அழகாக சிவப்பாக இருக்கத்தான் அனைவரும் விரும்புவார்கள். அழகாக இருக்க விருப்பம். ஆனா அவைகளை பராமரிப்பதில்லை. உதடுகளின் வெடிப்புகளுக்குத் தகுந்த சிகிச்சையை செய்ய பலரும் முயல்வதில்லை. வெறும் உதட்டு சாயம் உதடுகளை அழகாக காட்டாது. முறையான எளிய வைத்தியத்தை மேற்கொண்டாலே போதும்..

பொதுவாக வறட்சி, வெடிப்பு போன்றவை உதட்டில் வந்தால், மிகவும் வலியுடன், முக அழகையே அது கெடுத்துவிடும். இத்தகைய வெடிப்பு வருவதற்கு பருவநிலைமாறுபாடான கோடை, குளிர், காற்று போன்றவை காரணங்களாகும். ஏனெனில் உதட்டால், அளவுக்கு அதிகமாக எதையும் தாங்க முடியாது. மேலும் சில வெடிப்புகள் சில மருந்துகளினாலும், கெமிக்கல் கலந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்துவதினால், உடலில் நீர் வறட்சி இருந்தால், சோப்புகளை பயன்படுததுவதினாலும் ஏற்படுகின்றன. அதிலும் வெடிப்புகள் வந்தால், இரத்தம் வடிதல், தோல் உரிதல், அதிகமாக சிவப்பு நிறத்துடன் காணப்படுவது, தொட்டால் வலிப்பது என்று இருக்கும். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல் உதட்டை சரியாக பராமரிக்க இயற்கை முறையில் ஒரு சில ஈஸியான வீட்டு மருந்துகள் இருக்கின்றன. அது என்னவென்று பார்ப்போமா.
* எப்போதும் போதிய தண்ணீரை குடிக்க வேண்டும். இதனால் உடலில் வறட்சி ஏற்படாமல் இருப்பதோடு, உதடு நன்கு ஈரப்பசையுடன் இருக்கும்.

* வெண்ணெய் அல்லது நெய்யை உதட்டில் தடவினால், வறட்சி ஏற்படாமல் தடுக்கலாம். மேலும் வெடிப்புகள் இருந்தால் அவை சரியாகிவிடும்.

* ரோஜாவின் இதழ்களை பச்சை பாலில் ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதனை பேஸ்ட் செய்து, உதட்டில் தடவி வந்தால், உதடு நன்கு பிங்க் நிறத்தில் இருப்பதோடு, வெடிப்புகள் ஏற்படாமலும் இருக்கும்.

* உதட்டில் இருக்கும் இறந்த செல்களை நீக்க, தினமும் இரவில் படுக்கும் முன்பு, மில்க் க்ரீமை உதட்டில் தடவ வேண்டும்.

* உதட்டில் வறட்சியை நீக்க வெள்ளரிக்காயை வைத்து, தினமும் உதட்டிற்கு மசாஜ் செய்தால், வறட்சி நீங்கிவிடும்.

* வேப்பிலையை நன்கு அரைத்து சாறு எடுத்து, அதனை உதட்டில் தடவினால், உதட்டில் இருக்கும் வெடிப்புகள் போய்விடும்.

* ஆமணக்கெண்ணெயை உதட்டில் தடவி வந்தால், வறட்சி நீங்கி, உதடு பொலிவோடு காணப்படும்.

* கற்றாழையின் ஜெல்லை உதட்டில் தடவினால், உதட்டில் வெடிப்புகள் ஏற்படுவது குணமாகும்.

ஆகவே, மேற்கூறியவாறெல்லாம் உதட்டை பராமரித்து வந்தால், உதட்டில் வெடிப்புகள் ஏற்படாமல் பட்டுப்போன்று காணப்படும்.
அருமருந்தான அருகம் புல்..

இந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர். இந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்…

பல் ஈறு நோய்களுக்கு:

எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீர் சமஅளவு கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.5 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும். நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப் பழத்தில் துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.

உதடு வெடிப்புக்கு…

சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக்கொள்ளாது.

Friday, May 11, 2018

யானை - ஒரு தொகுப்பு

'யானை பாகனுக்கு யானையால் தான் சாவு' ன்னு சொல்லுவாங்க. பழக்கும் போது, பாகனோட சொல் பேச்சு கேட்க, பயங்கர கொடூரமா அடிப்பாங்க. அதனால, யானை அந்த காயத்தோட வடுவையும், வலியையும் மனசுல நியாபகம் வெச்சுகிட்டே இருக்கும். மஸ்து நேரத்துல வாய்ப்பு கிடைச்சு அந்த கோபம் வெளிப்பட்டு ருத்ர தாண்டவம் ஆடிரும். முக்கியமா... மஸ்து நேரத்துல, தலைமை பாகன்... யானை பக்கத்துல இருக்க மாட்டான். காரணம், யானைக்கு தன் பாகன் மேல் இருக்கும் வன்மம் வெளிப்படும் நேரம் அதுதான்.

ஒரு யானைய பழக்கும் போது அந்த யானைய சுத்தி நாலு அல்லது ஐஞ்சு கும்கிய நிறுத்துவாங்க. ஒரு ஏழெட்டு பாகன்கள் அந்த யானைக்கு முன்னாடி நின்னு ஆளுக்கு ஒரு குச்சிய கீழ போடுவாங்க. பக்கத்துல ஒரு கும்கி நிற்கும். அது, எப்பிடி குச்சிய எடுத்து பாகன் கைல குடுக்கனும்னு திரும்ப திரும்ப செஞ்சு காட்டும். அவ்வளவு சுலபத்தில் புது யானை குச்சிய எடுத்துடாது. ஆனா அது எடுக்கற வரைக்கும் கும்கிகள் விடாது. புது யானைய தந்தங்களால் முட்டி நொறுக்கும். பாகன்கள் ஒன்றரை இஞ்ச் தடிமனில், ஆறடி நீளத்தில், ஒரு வாரம்  விளக்கெண்ணையில் ஊறப் போட்டு தீயில் வாட்டிய, யானைகளுக்காகவே ஸ்பெஷலா தயார் செஞ்ச காட்டு மூங்கில் பிரம்புகள வெச்சிருப்பாங்க. வளைச்சா வட்ட வடிவத்துல ரப்பர் மாதிரி முனைக்கு முனை முட்டும். மனுஷன் அதுல ஒரே ஒரு அடி வாங்குனா செத்துருவான். அதால அடிச்சு வெளுப்பாங்க. பிளிரும்... ரெண்டு கால்ல எழுந்து நிற்கும். ஆனா குச்சிய எடுக்காது. எடுக்குற வரைக்கும் கும்கிகளும், பாகன்களும் விடமாட்டாங்க. கடைசியா அடி தாங்காம குச்சிய எடுத்து  எந்த பாகன் கைல குடுக்குதோ, அவனைதான் அந்த யானைக்கு பிடிச்சிருக்குன்னு அர்த்தம். இனி அவனுக்கு மட்டுமே கட்டுப்படும். அவன்தான் வாழ்நாள் முழுவதும் அந்த யானைக்கு தலைமை பாகன். இப்ப யானைக்கு பிடிச்சவன தேர்ந் தெடுத்தாச்சு. இனி யானைக்கான பயிற்சி ஆரம்பமாகும்.

அதை பழக்கறதுகுள்ள, தும்பிக்கைய தூக்க முடியாத அளவுக்கு கரோல்ல அடைச்சு... மூணு நாளைக்கு உணவு குடுக்க மாட்டாங்க. நாலாவது நாள் தன் பாகனை பார்த்து கெஞ்சும். கொஞ்சம் கரும்பும் வெல்லமும் குடுத்து ருசிகாட்டி, பசிய தூண்டி சொல் பேச்சு கேட்டா.. கரும்பு வெல்லம் கிடைக்கும்னு அதுக்கு உணர வெச்சு, வழிக்கு கொண்டு வருவான். அதுக்குள்ள எத்தனை அடிகள் சித்ரவதைகள் அப்பப்பா. அந்த பாகனை கண்டாலே, யானைக்கு மனசுல ஒருவித கிலி ஏற்படுற மாதிரி பண்ணிருவான். என்ன பயமும் பாசமும் ஏற்பட்டாலும், அவ்வளவு சீக்கிரம் தன் மேல் யாரையும் ஏற விட்டுடாது.

கட்ட கடைசியா... என்னைக்கு அந்த யானை,  பாகனை முழுசும் எந்த எதிர்ப்பும் இல்லாம, தன் முன்னங் கால்கள மடக்கி குடுத்து, அதன் வழியா மேல ஏறி உட்கார அனுமதிக்குதோ... அன்னைக்கு பூஜை போட்டு கும்கிகளின் துணையோட கரோல திறப்பாங்க. பாகன் யானை மேல உட்கார்ந்து தான் கரோலை விட்டு வெளிய வரனும். அப்பதான் அது முழுசும் பழக்கப் பட்டதுக்கான அடையாளம். இதெல்லாம் நடக்க 48 நாட்கள் ஆகும். கோவை மாவட்டத்துல 13 பேரை கொன்று, கேரள அரசால் சூட்டிங் ஆர்டர் கொடுக்கப்பட்ட மிகப் பெரிய ரௌடி 'மக்னா' யானை, இன்னைக்கு முதுமலை கேம்ப்ல மூர்த்திங்குற பேர்ல அவ்ளோ சாதுவா இருக்கு. அந்தளவுக்கு சித்ரவதை ட்ரெய்னிங்.

மஸ்துன்னா மதம்.. நவம்பர் டூ ஜனவரி யானைகளின் இணைச் சேர்க்கை காலத்தில், நெத்தியில் இருந்து மஸ்து நீர் வடியும். பாகன் மேல் பாசம் உள்ள யானைகள், மஸ்து ஆரம்ப நிலையிலேயே பாகனை எச்சரிக்கை செய்யும். சாதாரணமா ஒற்றை கால் சங்கிலிதான் போடுவாங்க. ஆனா மஸ்து அறிகுறி ஆரம்பமாகும் போதே... ரெட்டை காலுக்கு சங்கிலி போட்ருவாங்க. சாதாரணமா அங்குசத்த பார்த்தா கட்டுப்படும் யானை, மஸ்து நேரத்துல கட்டுப்படாது. அதன் பிறகு யாரும் கிட்ட நெருங்க முடியாது. மூணு மாசமும் அதற்கு ஒரே இடம்தான். அந்த மஸ்து நீரோட வாசம், நீண்ட தூரம் வீசும். வாசம் வந்தா... எந்த காட்டு யானையும் அந்த ஏரியாலயே நிக்காது. மஸ்து நிலையில் இருக்கும் யானை வினோதமா நடந்துக்கும். தும்பிக்கையை தூக்கி தந்தத்து மேல போட்டுக்கும். பயங்கர ரெஸ்ட் லெஸ்ஸா இருக்கும். உர்ர்ர்ர் ன்னு உருமிகிட்டே இருக்கும். எப்பவும் யானை உருமல்ல இருக்கும் போது பக்கத்துல போகக் கூடாது. கோபத்தின் அறிகுறி. பார்வை வெறிச்சு இருக்கும். மண், செடி, கொடிகளை தலைமீது போட்டுக் கொள்ளும். ரொம்ப பசி எடுக்குற வரை சாப்பிடாது. மஸ்து நீரை தும்பிக்கையால தொட்டு தொட்டு ருசி பார்க்கும். அந்த சுவை யானையை மேலும் மேலும் வெறி ஏற்றும். அதனால மஸ்து நேரத்துல நூறு பேர் எதிர்ல நின்னாலும், அபார நியாபக சக்தி கொண்ட யானை,  தன்னோட பாகன் மேலான பகைய தீர்த்துக்க... தன்னிலை மறந்து, வெறி கொண்டு முதல்ல அவனதான் தேடும். சிக்குனான்... அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சு போட்ரும்.

சின்ன கொசுறு தகவல்:

யானைல ஆறு வகை. அதில், தும்பிக்கையை ஒட்டி கீழ் நோக்கி வளரும் தந்தங்களை கொண்ட யானைகளை வளர்க்கவே முடியாது. நம்பக தன்மை இல்லாதது. எப்பவும் ரெஸ்ட் லெஸ்ஸா.. கொல வெறியோடவே இருக்கும். எந்த நேரம் ஆளை தூக்கும்னு கணிக்கவே முடியாது. கும்கி படத்துல வர்ற கொம்பன் யானை வகைதான் அது.

அதே போல உடம்பில் முதுகெலும்பு தூக்கிக் கொண்டு, ஆள் உட்கார முடியாத உடலமைப்பு கொண்ட யானை களையும், இடுங்கிய கண்களை கொண்ட யானை களையும், நெற்றி துருத்திய யானை களையும் வளர்க்கவே முடியாது. பயங்கர சிடு மூஞ்சி. இது அவ்வளவு ஆபத்தில்லை னாலும் கூட, கையாள்வது சிரமம். வேண்டா வெறுப்பா கட்டளைக்கு அடி பணியும். இதன் மீது துர்நாற்றம் வீசும். (இந்த படத்தில் உள்ள வகை)

ஒழுங்கில்லாத தந்தங்கள் அல்லது ஒற்றை தந்தம் கொண்ட யானையை வளர்க்கவே கூடாது. வனத்துறை, வீட்டில் வளர்க்க அனுமதி கொடுக்காத ஒரே வகை இதுதான். காட்டு யானைகளில், இந்த ஜாதி யானைகள்தான் ஆட் கொல்லிகள். மற்ற வகைகள் வெறும் மிரட்டலுடன் விலகி போய்விடும். இது மறைந்திருந்து தாக்கும் அறிவும் குணமும் உடையது. மனுஷன பார்த்துட்டா, அனல் போல கொதிநிலைக்கு போயிடும். பயங்கர ராட்ஷசன். அது உடம்பிலிருந்து அழுகிய மாமிச வாசம்  வீசும். மலைவாழ் மக்கள், இந்த யானையின் மீது வீசும் குமட்டல் வாடையை வைத்தே இது வருவதையோ, அருகில் நிற்பதையோ கண்டு பிடித்து விடுவார்கள்.

ஒச்சம் இல்லாத, நிமிர்ந்த தலை, சம அளவுகளில் அகலமாக முன் நோக்கி V வடிவில் பால் போன்ற நிறமுடைய தந்தங்கள், தேன் நிறத்தில் மின்னும் கண்கள், எப்பவும் முகத்தில் ஒரு சாந்தம், அருமையான கீழ்படிதல், வசீகரிக்கும் அழகு கொண்ட உடலமைப்பு, அடர்ந்த முடி கொண்ட வால், அழகான நகங்கள், மடங்காத காதுகள், ஆள் அமரும்படி படுக்கை போன்ற முதுகமைப்பு, நடக்கும் போது அடி மாற்றி வைக்காமல் சரியான அளவுகளில் காலை முழுவதும் தரையில் ஊன்றி நடத்தல், தன் சுற்றுப் புறத்தை சுத்தமாக பராமரித்தல், அன்புக்காக ஏங்கும்,  மனிதர்களுடன் முக்கியமாக குழந்தை களுடன் நன்கு பழகி, சொல் பேச்சு கேக்கும். இது பட்டத்து யானையோட சாமுத்திரிகா லட்சணம். இது போன்ற குணங்கள், பத்தாயிரத்துல ஒரு யானைக்குதான் அமையும். இதன் உடம்பில் தாமரை பூவின் நறுமணம் வீசும். முழுவதும் இந்த மொத்த குணங்களும் அமையக் கிடைக்கா விட்டாலும், இதில் மூன்றில ஒரு பங்கு குணங்கள் அமையப் பெற்ற யானைகளை தாராளமாக வளர்க்கலாம். மனிதர்களை தாக்காது.

Sunday, March 11, 2018

வேலம்மாள்  மருத்துவமனை

5 ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை மதுரையில் உள்ளது. அது வேலம்மாள்  மருத்துவமனை .

ஓர் உடல் பிரச்சனை காரணமாக சக வழக்கறிஞர் ஒருவரை இங்கு அழைத்து வந்தோம். உள்ளே நுழைந்த உடனே அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல ஒரு நர்ஸ் இருந்தார்.

ஒரு ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4
டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தான் முதலில் கண்டேன்.

எனக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..

1. டாக்டர் பீஸ் கிடையாது.

2.அட்மிஷன் பணம் கிடையாது .

3.அட்மிஷன் செய்த பின்னர் வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.

4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG 65 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.

5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது.

நமக்கான ஒரேயொரு செலவு இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் 8% தள்ளுபடி.

மிகவும் சுத்தமான மருத்துவமனை.  அருமையான கவனிப்பு.

என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appoloவில் ஒன்றரை லட்சம். போரூர் ராமச்சந்திராவில் 84,000  மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 13,500 மட்டுமே.அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.

பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.

வேலம்மாள் மருத்துவமனை - மதுரை.

*படித்தவை பகிர்ந்தவை குழு நிறுவனர்*                       Velammal Medical College Hospital & Research Institute

Velammal Village, Anuppanadi, Near Chinthamani Toll Gate, Madurai, Tamil Nadu 625009
0452 711 3333

https://g.co/kgs/7Xfqbc

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்

🛞புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…! உலகிலேயே அழகா...