Tuesday, October 13, 2020

மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்

 1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. 

3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால்  கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல்  பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும். 

4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின்  சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள்.
இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.  

5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.

6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

7.அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.

8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும். 

8.மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

9.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை. 

10.அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும். 

13.வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம்.சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட  கோவில்

14. தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம்.சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

15. இவளின் அண்ணன் மாயவன் அழகர்மலை அழகுமலையான்.உலக அதிசியங்களுள் ஒன்று அன்னையின் ஆலயம். இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாட்சி அம்மா போற்றி போற்றி போற்றி....

Sunday, October 11, 2020

IAS தேர்வு என்றால் என்ன ?

IAS மற்றும் IPS உள்ளிட்ட 
24 பணிகளுக்காக 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

*F.A.Q*
*IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?*
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

*IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?*
குறைந்தபட்ச வயது : 
21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
அதிகபட்ச வயது : பொதுப்பிரிவினர் 
(GENERAL) : 32
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35
ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37.

*ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?*
பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited)

*ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?*
சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு
ஆளுமை அதிகாரம்
பெருமதிப்பிற்குரிய பணி
சமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை
மேலும் பல…..

*IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?*
இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

*IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?*
முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

*IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?*
இல்லை.
ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.
*என்னால் முடியுமா ?*
கண்டிப்பாக முடியும்.
இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.
ஆனால் உண்மையான போட்டியாளர்கள் ஆயிர கணக்கில் மட்டுமே.

உண்மையான போட்டியாளர்கள் 
என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன்,
தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..❗
*IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?*
*தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?*
இல்லை.
IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.
அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

*IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?*
IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.
அது ஓர் போட்டித் தேர்வு.
ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

*IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?*
முற்றிலும் தவறான கருத்து.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

*IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?*
இல்லை.
அப்படி எதுவும் இல்லை.. 
நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.
அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்
தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்
வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்
சரியான திட்டமிடல்
திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்
மாதிரித் தேர்வுகள் எழுதுதல்
சரியான வழிகாட்டல்
இறுதியாக முழு நம்பிக்கையோடுj இருத்தல்
இவை அனைத்தும் இருந்தால் நீங்களும் 
ஒரு IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்..I
தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

Monday, October 5, 2020

திருப்பாதாளேஸ்வரர்

திருப்பாதாளேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது.

*திருடு போன பொருட்களை மீட்க உதவும் பைரவர்*

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது துர்வாசபுரம் என்ற திருத்தலம். இங்கு திருப்பாதாளேஸ்வரர் என்ற ஆலயம் அமைந்துள்ளது. 

பொது மக்களால் இக்கோவில், ‘பாதாளேஸ்வரர் கோவில்’ என வழங்கப்பெற்றாலும், ஆலயத்திற்குள் ‘சுந்தரேஸ்வரர் திருக்கோவில்’ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆலயத்தில் உள்ள அம்பாளின் திருநாமம் பாகம்பிரியாள் என்பதாகும். 

முற்காலத்தில் இந்த அம்மனை ‘சகஜரி நாயகி’ என்று அழைத் திருக்கிறார்கள். 

திருமணத்தடையால் திருமணம் தள்ளிப்போகும் பெண்கள், இந்த ஆலயத்திற்கு வந்து இறைவியை வணங்கிச் சென்றால் விரைவில் திருமணம் நடைபெறும் என்கிறார்கள். 

அப்படி தங்களது நேர்த்திக்கடன் நிறைவேறிய பெண்கள், தம்பதி சமேதராக இந்த ஆலயத்திற்கு வந்து, அம்மனுக்கு வளையல் காணிக்கை செலுத்திச் செல்கின்றனர். 

இத்தல பைரவர் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். இவரிடம் குழந்தைகளுக்காக பூஜை செய்வது மிக, மிக சிறப்பு. 

அவர்களின் ஆரோக்கியம், கல்வி நலுனுக்காக தனியாக பூஜை செய்ய வேண்டும். 

இத்தல பைரவர் மிகவும் உக்கிரமானவர் என்பதால், பைரவருக்கு ஆராதனை செய்த கற்பூர ஆரத்தியை பக்தர்களுக்கு தருவதில்லை. 

திருச்செந்தூரில் முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை சஷ்டி விழாவாக கொண்டாடுவது போல், இத்தல பைரவர், சம்பாசுரனை வதம் செய்த நிகழ்வு ‘சம்பா சஷ்டி விழா’ என்ற பெயரில் கார்த்திகை மாதத்தில் நடத்தப்படுகிறது.

பைரவர் சன்னிதியில் பூசணிக்காயை பாதியாக வெட்டி, உள்ளே உள்ள விதை முதலியவற்றை நீக்கி, அகல் போல் ஆக்கி, அதனுள் நல்லெண்ணையை நிரப்பி, நூல் திரிகளை வைத்து விளக்கேற்றிப் பிரார்த்தனை செய்தால், குடும்பத்தில் ஏற்படும் பில்லி- சூனியங்கள், மாந்திரீகள் எல்லாம் நீங்கிவிடுமாம். 

அதேபோல் கால பைரவருக்குச் சாம்பிராணி புகை போட்டு வழிபாடு செய்தால், திருடு போன பொருட்களெல்லாம் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. 

ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கே வந்து சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகச் சிறப்பாகும்.

மேலும் விவரங்களுக்கு சொடுக்கவும்....

https://temple.dinamalar.com/en/new_en.php?id=317

Sunday, October 4, 2020

மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாக்கும் வழிமுறைகள் !

ழைக்காலத்தில் வரும் பல்வேறு நோய்களால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான்.எனவே குழந்தைகளை எப்போதுமே கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.அதுவும் மழைக் காலம் என்றால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, சாதாரண சளி, காய்ச்சல் முதல் டெங்கு ஜுரம், தொற்றுநோய்கள் போன்ற அனைத்தும் வர ஆரம்பித்துவிடும்.  நோய்க்கிருமிகள் பரவ, மிகவும் சாதகமாக இருப்பது குளிர்ச்சியான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைதான்.

இதற்குக் காரணம்.ஆங்காங்கே நீர் தேங்குவதால், கொசு மற்றும் ஈக்கள் மூலம் பரவும் பாதிப்புகளாகும். 

ஆஸ்துமா, நாள்பட்ட மூச்சுக்குழாய் அடைப்பு நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  மூச்சுவிட மிகவும் சிரமமாக இருக்கும். நெற்றி  மற்றும் கன்னங்களில் இருக்கும் சைனஸ் அறைகள், தொற்று காரணமாக பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம். இதனால், சைனஸ் தலைவலி  வரலாம்.
காது,மூக்கு,தொண்டை வியாதிகள்

மழைக்காலங்களில் டான்சில் மற்றும் சைனஸ் நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படும். தினமும் உப்பு கலந்த வெந்நீரால் தொண்டை வரை கொப்பளிக்க வேண்டும்.குளிர்ந்த காற்று முகத்தில் படாமல் பாதுகாத்து கொள்ள வேண்டும்.

மழை காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்

சூப்

மழை பெய்யும் போது சூடாக சூப் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்படி தோன்றுகையில், நூடுல்ஸ் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சமைத்து சாப்பிடுவதற்கு பதிலாக, காய்கறிகள் சேர்த்து செய்யப்படும் சூப் செய்து குடித்தால், உடலில் சத்துக்களின் அளவை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.

ஜீரகம்

மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும்.மேலும் 

உண்ணும் உணவுகள் செரிமானமாகாமலும் இருக்கும். எனவே உங்கள் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், செரிமான மண்டலம் சீராக இயங்கவும், சீரகத்தை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது.

இஞ்சி டீ

தினமும் டீ குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் அதில் சிறிது இஞ்சியை தட்டி போட்டு கொதிக்க வைத்து பின் வடிகட்டி குடித்தால் சளியினால் ஏற்படும் தொந்தரவு நீங்கும்.

மஞ்சள்

மஞ்சள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புத் தரும். எனவே மஞ்சளை அனைத்து உணவிலும் சேர்ப்பதோடு, தினமும் இரவில் சூடான பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள்.

மேலும்  பால அமிர்தம் என்னும் நம் பராம்பரிய மருந்துகளை கொன்டு உருவாக்கப்பட்ட ஆயுர்வேத அரு மருந்து 
சளி .காய்ச்சல் ஜலதோசம் போன்ற தொல்லைகளுக்கு நிவாரணம் கொடுக்கின்றது.

நந்தி தேவர்- சிவாயநம

 சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது. அதுவிடும் மூச்சுக்காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.

  ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன்- இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.

   திவ்ய வடிவமும், நெற்றிக் கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பு உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானை புரியும், இருபுயங்களில் மானும் மழுவும் கொண்டு இன்னுமொரு சிவரூபனாகவே திகழும் நந்தியின் கதைதான் என்ன?

#சிலாதர்கண்டெடுத்தசிவக்குழந்தை

  வீதஹவ்யர் என்ற பெயர் கொண்ட முனிவர், தம் சிறு வயதில் சிவனடியார் ஒருவரின் அன்னப் பாத்திரத்தில் விளையாட்டாக கல்லைப் போட்ட தீவினையால், இறந்த பிறகு பெரும் பாறை ஒன்றைத் தின்று தீர்க்க வேண்டும் என்ற தண்டனை இருப்பதை யமதூதர்கள் மூலம் முன்னரே அறிந்து, இறப்பதற்கு முன்னரே பாறையைத் தின்று தன் பாவம் போக்கிக்கொண்டவர். ஆதலால்தான் இவருக்கு “சிலாத முனிவர்’ என்ற பெயர் வந்தது.

   திருமணம் முடிந்து பிள்ளை பெற்று பிதுர்க்கடனை நிறைவேற்ற சிலாத முனிவர் தவறியதால், அவரின் முன்னோர் நரகத்தில் உழன்று கொண்டிருந்தனர். இதனால் வருந்திய சிலாத முனிவர் சித்திரவதி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டும் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லை. கலக்கமுற்ற சிலாத முனிவர் இந்திரனின் ஆலோசனைப்படி ஸ்ரீ சைலமலை சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முற்பட்டபோது, தங்கப் பெட்டியில் சிவரூப சுந்தரனாக குழந்தையொன்றைக் கண்டெடுத்தார். அந்தக் குழந்தையே நந்தியெம் பெருமானாவார். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். சிலாதரின் கவலையைப் போக்கி மகிழ்ச்சி உண்டாக்கும் விதம் கிடைத்தவர் ஆதலால் நந்தி என்று அவருக்குப் பெயரிட்டார் சிலாதர்.

#நந்தியின்தவமும்  #ஈசன்தந்தபட்டமும்
——————————————————-
    சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார் நந்தி. இந்நிலையில் சிலாதரின் இல்லத்துக்கு வருகை தந்த மித்ரன், வருணன் போன்றோர் நந்தியின் ஆயுள் இன்னும் ஒரு வருடமே என்று சிலாதரிடம் எடுத்துச் சொல்ல, மிக வருத்தம் கொண்டார் சிலாத முனிவர். நந்தி தன் தந்தைக்கு ஆறுதல் கூறிவிட்டு, சிவதவம் செய்யக் கிளம்பினார். முந்நூறு வருடங்கள் கடும் தவம் செய்தார் நந்தி. இறுதியாக அவரின் தவத்தினால் மகிழ்ந்த ஈசன், நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்தினார்.

   நந்திதேவர் சிவபெருமானுக்கு பூஜை செய்யும் அற்புதக் காட்சி ஒன்று நாகை மாவட்டம், ஆத்தூர் மந்தாரவனேசுவரர் ஆலய கோஷ்டத்தில்- கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிற்ப வடிவில் உள்ளது.

   தவம் செய்ததனால் நந்தியெம் பெருமான் சிவாலயங்கள்தோறும் வீற்றிருக்கும் பேறும், பிரதோஷ காலங்களில் வழிபடுவோருக்கு அருள் வரம் தரும் பேறும் கிடைக்கப் பெற்றார்.

   சிவபெருமான் இருக்குமிடம் கயிலாயம். சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும். எதையாவது செய்ய முடியாமல் யாராவது தடுத்தால், “இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்’ என்பார்கள். நந்தியின் வேலை தடுப்பதுதான்.

  முப்புரம் எரிப்பதற்காக சிவன் புறப்பட்டார். அப்போது அச்சு முறிந்தது. விஷ்ணு நந்தியாகி, தேரினைத் தாங்கினார். தர்மதேவதை சிவனுக்கு நந்தியானார். அந்த நந்திதான் சிவாலயத்தின் கர்ப்பக் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் நந்தியாகும். அந்த நந்திக்கும் மூலவருக்கு இடையில் குறுக்கே போகக் கூடாது என்பார்கள். தர்ம நந்தியின் மூச்சுக்காற்று மூலவர்மீது பட்டுக்கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.

Thursday, October 1, 2020

வில்வத்தில் இருக்கும் விஞ்ஞானம்

தேவலோகத்தைச் சேர்ந்த ஐந்து தெய்வீக விருட்சங்களில் ஒன்று வில்வம்.

பாதிரி, வன்னி, மா, மந்தாரை ஆகிய ஐந்து விருட்சங்களைப் பஞ்ச விருட்சங்கள் என்று போற்றுகின்றன புராணங்கள்.

இந்த ஐந்து மரங்களில் ஒன்றான வில்வத்தை நாம் தொட்டாலே, அது நம்மைப் புனிதப்படுத்தும் தன்மை கொண்டது.

இதை ஸ்பரிசித்து உட்கொண்டாலே மோட்சம் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

வில்வம் சிவபெருமானின் அம்சம் என்பது மட்டுமல்ல, முருகனுக்கும் மிகவும் பிரியமானது. முருகனின் அர்ச்சனை நாமங்களில், 'வில்வ பிரியா' என்பதும் ஒன்று.

பெரும்பாலான சிவாலயங்களில் வில்வ விருட்சமே தலவிருட்சமாக அமைந்திருக்கிறது. ஒரே ஒரு வில்வ இலையை எடுத்து பக்தி சிரத்தையுடன் உட்கொள்ள, பிறவியின் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகிவிடும்.

திரிதளஞ்ச; திரிகுணாகாரம்;  
திரிநேத்ரஞ்ச; திரியாயுதம்;  
திரிஜன்ம பாப சம்ஹாரம்  
ஏக பில்வம் சிவார்ப்பணம்.

என்ற மந்திரத்தை உச்சரித்து உண்பது பெரியோர்களின் வழக்கம்.

வில்வத்தின் விஞ்ஞான குணம்:

ஆங்கிலத்தில் வில்வத்துக்கு ஆங்கில பெயர் Aegle marmelos.

ஒரு தேவதையைப் போல் அதீத சக்திகள் வாய்ந்தது இந்த மரம்.

வில்வ இலைகளில் சுழலும் எலெக்ட்ரான், தீட்சண்யமான அதிர்வலைகளை வெளியிட வல்லவை.

வில்வ இலைகளை, குறைந்தது பன்னிரெண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து, அந்த நீரைப் பருகுவதால் உடலின் ஒவ்வோர் அணுவும் புத்துயிரூட்டப்படுகிறது.

வில்வ இலை நீருக்குள் செலுத்திய மின்காந்த அலைகள், நம் உடலுக்குள் புகுந்து செயல்படுவதே இதற்குக் காரணம்.

செப்புக்குவளையில் வைத்த நீரில் வில்வ இலையை ஊறப் போடும்போது, அதிர்வலைகளின் செயல்வேகம் மேலும் அதிகரிக்கிறது.

நிலத்தில் ஆழமாக வேரோடும் வில்வமரத்தின் வேர்கள், மண்ணைக் கவ்விப் பற்றி நிலச்சரிவு ஏற்படாமல் காக்கின்றன.

காலம்காலமாக மண்ணின் இறுக்கத்துக்குப் பெரிதும் உதவி உள்ளன வில்வ வனங்கள்.

மருத்துவ குணம்:

வில்வமரத்தின் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை.

வில்வ இலைகள் ஊறவைக்கப்பட்ட நீரில் குளித்து, சோப்பு போடாமல் பாசிப்பருப்புப் பொடி தேய்த்துக் கொண்டால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.

வில்வ இலைத் தளிர்களை லேசாக வதக்கி, இமைகளில் ஒத்தடம் கொடுக்க, கண் தொடர்பான நோய்கள் நீங்கும்.

வில்வ வேரை இடித்து ஒரு குவளை நீரில் கொதிக்கவைத்து, அதை காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து தினமும் உண்ணும் ஆண்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

Tuesday, September 29, 2020

பஞ்ச சபைகள்

ரத்தின சபை – திருவாலங்காடு
கனகசபை – சிதம்பரம்
ரஜிதசபை – (வெள்ளி சபை) – மதுரை
தாமிரசபை – திருநெல்வேலி
சித்திரசபை – திருக்குற்றாலம்
பஞ்ச தாண்டவ தலங்கள்

ஆனந்த தாண்டவம் – சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம் – திருவாரூர்
சுந்தரத் தாண்டவம் – மதுரை
ஊர்த்துவ தாண்டவம் – அவிநாசி
பிரம்ம தாண்டவம் – திருமுருகன்பூண்டி

காட்டிடை ஆடும் கடவுள்

திருவாலங்காடு – ஆலங்காடு
திருவெண்பாக்கம் – இலந்தைக்காடு
திருவெவ்வூர் – ஈக்காடு
திருப்பாரூர் – மூங்கிற்காடு
திருவிற்கோலம் – தர்ப்பைக்காடு

ஆனந்தத் தாண்டவம்

படைத்தல் – காளிகாதாண்டவம் – திருநெல்வேலி, தாமிரசபை.
காத்தல் – கவுரிதாண்டவம் – திருப்புத்தூர், சிற்சபை.
அழித்தல் – சங்கார தாண்டவம் – நள்ளிரவில்.
மறைத்தல் – திரிபுர தாண்டவம், குற்றாலம், சித்திரசபை
அருளல் – ஊர்த்துவ தாண்டவம் – திருவாலங்காடு, ரத்தினசபை.
ஐந்தொழில்களையும் ஒருங்கே நடத்தும் ஆனந்தத்தாண்டவம் சிதம்பரத்தில்.

சிவன் கோயிலில் முதலில் யாரை கும்பிட வேண்டும்

கோயிலுக்கு செல்பவர்கள் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.

சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.

சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.

விநாயகரை இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.

இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.

கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.

விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.

சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.

ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.

மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.

நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.

நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.

பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.

நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

Monday, September 28, 2020

இராமேஸ்வரம் கோவிலில் எவருக்குமே தெரியாத சில அற்புத சக்தி வாய்ந்த சன்னிதிகள் பற்றிய பதிவு

ராமேஸ்வரத்தில் பிரகாரங்களில் சுற்றி வரும்போது நிறைய லிங்கங்கள் இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

இவற்றில் சில லிங்கங்கள் கோவில் நிர்வாகத்தாலும்,
பக்தர்களாலும் கவனிக்கபடாமல்,பூஜைகள் நடைபெறாமலும் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

அப்படி ஒரு லிங்கம் பல நூறு வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் தூசி 
பிடிக்கப்பட்டு,பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

சிவராத்திரி அன்று மட்டும் பக்தர் ஒருவர் 
கோவில் நிர்வாகிகளிடம் அனுமதி பெற்று அந்த சிவ லிங்கத்தை தனது சொந்த முயற்சியால் சுத்தம் செய்து லிங்கத்தை நன்றாக வில்வ இலைகளால் அலங்காரம் செய்து வருகின்றார்

மூன்றாம் பிரகாரத்தில் நளன், நீலன், கவன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட சிவன் சன்னதிகளுக்கு அருகில் உள்ள இந்த லிங்கத்தின் பெயர் நீலேஸ்வரர் லிங்கம்.

இந்த நீலேஸ்வரர் லிங்கத்தின் சிறப்பு என்ன வென்றால் பல நூறு வருடங்களுக்கு முன்பு சீதையால் பிரதிஷ்டை செய்யபட்ட தற்போதுள்ள ராமநாதர் லிங்கத்திற்கு பதிலாக‌இருந்த
மூலவர் லிங்கம் இவர்தான் என கூறப்படுகிறது

இந்த லிங்கத்தை இராமநாதபுரத்தில் வசிப்பவர்கள் யாரும் தரிசித்தது இல்லை.

இந்த லிங்கத்தை தரிசிப்பதற்குரிய
பிராப்தம் இருந்தால் தரிசிக்க முடியும்.

மேலும் ராமேஸ்வரம் கோவிலில் ராமநாதர் சன்னிதிக்கு பின்புறம் 
உப்புக்கல்லால் செய்யப்பட்ட ஒரு பழமையான லிங்கம் உள்ளது.

பல வருடங்களாக அந்த உப்புக்கல்லால் செய்யப்பட்ட  உப்புலிங்கம் கரையாமல் அப்படியே உப்புக்கல்லாகவே இருப்பது மிகவும் அதிசியமாகும்.

இந்த லிங்கம் வந்ததற்கு ஒரு கதை கூறப்படுகிறது. 

ஒரு முறை சிலர்,ராமேஸ்வரம் கோவிலில் உள்ள லிங்கம் மணலால் ஆனது அல்ல என்றும், அப்படி மணலால் செய்யப்பட்டது என்றால், அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் வாதம் செய்தார்கள். 

அந்த நேரத்தில் பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். ஆனால் அந்த லிங்கம் கரையவில்லை. 

அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்யபட்ட லிங்கமே கரையாதபோது, காக்கும் கடவுளின் மனைவியான சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது’ என்று கூறினார்.

அவர் செய்த உப்பு லிங்கத்தை இப்போதும் நாம் தரிசனம் செய்யலாம்.
 
மேலும் இராமேஸ்வரம் கோவிலில் அநேகம்பேருக்கு  தெரியாத சேதுமாதவர் சன்னதி ஒன்று உள்ளது.

காலில்சங்கிலியுடன் பெருமாள்-சேதுமாதவர் சன்னிதி

சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான்.
 அவனது குழந்தை பாக்கியம் 
இல்லா குறையைத் தீர்க்க  மகாலட்சுமியையே 
அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். 

அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.

மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான்.

பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார்.

அன்றிரவில் மன்னனின் கனவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.

இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக 
அருளுகிறார். 

அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.

இவரது சன்னதி அருகில் லட்சுமி நாராயணர், யோக நரசிம்மர் இருவரும் அருகருகில் காட்சி தருகின்றனர்.

கடுமையான பிதுர்தோஷம் உள்ளவர்கள் இராமேஸ்வரம் கோவிலில் உள்ள அனைத்து தீர்த்தத்திலும் நீராடிவிட்டு இந்த சேதுமாதவர் சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வணங்கினால் மட்டுமே கடுமையான பிதுர்தோஷத்தை நீங்கும் என்பது எவருக்குமே தெரியாத தேவரகசியமாகும்.

ராமர் இங்கு சிவபூஜை செய்தபோது அவரைப்பிடித்த பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்த பாவம்) விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க, சிவன் பைரவரை அனுப்பினார். அவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி, பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து, இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு “பாதாள பைரவர்’ என்று பெயர். இவரது சன்னதி கோடிதீர்த்தம் அருகில் உள்ளது.

இந்த பைரவரை வழிபட்டால் கொடிய தோஷமான பிரம்மஹத்தி 
தோஷம் (கொலை செய்த பாவம்)வறுமை, நோய் யாவும் உடனடியாக அகலும்.

இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவரகள் பல நூறு வருடங்கள் பழமையான நீலேஸ்வரர் லிங்கம்.,உப்புக்கல்லால் செய்யப்பட்ட உப்பு லிங்கம், சேது மாதவர் சன்னிதி மற்றும் பாதாள பைரவர் ஆகிய சன்னிதிகளுக்கு சென்று தரிசித்து பயன்பெறுவதற்காக இந்த விபரங்கள் பதிவிடபட்டுள்ளது.

உத்திர கோசமங்கையின் சிறப்பு

சிவாயநமக ஓம்.
 உலகிலேயே சிவபெருமானுக்கு என்று முதலில் உருவாக்கப்பட்ட ஆலயம் உத்தர கோசமங்கை ஆலயம்.

• நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவான  கோயிலும் இதுதான்.

•   நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட கோயிலும் இதுதான்.

• ஆயிரம் சிவனடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்ற ஆலயமும் இதுவேதான்.

• மூவாயிரம் ஆண்டுகளாக பூத்துக்குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயமும் இதுதான்.

• தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவாவதற்கு காரணமான  இருந்த இடமும் இதுதான்.

• உலகிலேயே முதல் மரகத நடராஜர் சிலை நிறுவப்பட்ட ஆலயமும் இதுதான்.

இப்படி பல பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாக இருக்கும் ஆலயம் ஸ்ரீ ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோயில்.

இக்கோயிலைப் பற்றி கிடைத்த சில சிறப்பு தகவல்கள் உங்களுக்காக :

• உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சிலை "சுயம்பு லிங்கம்" மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்படுகிறது.

• இக்கோயில் மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

•  உத்தரகோசமங்கை என்னும் ஊரையே சிவபெருமானின் சொந்த ஊர் என்றும் அழைக்கப்படுகிறது.

•  இக்கோயிலில் உமாமகேஸ்வரர் சன்னதி முன்பு  தம்பதியர் இணைந்து வழிபாடு செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.

•  திருவிளையாடல் புராணத்தில் வரும் "வழியில் மீன் பிடித்த படலம்" என்னும் வரியில் இத்தலத்தை தான் குறிப்பிட்டுள்ளனர்.

•  இந்நகரம் சிறிதுகாலம் பாண்டிய மன்னரின் காலத்தில் அவர்களது தலைநகரமாக விளங்கியது.

•  ஆரம்ப காலகட்டத்தில் சிவபுரம், தெட்சிண கயிலாயம் , சதுர்வேதி, மங்கலம் , இலந்திகைப்பள்ளி,  பத்திரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்கிரபுரம் , மங்களபுரி ஆதிசிதம்பரம்  என்றெல்லாம்  அழைக்கப்பட்டதாக வரலாற்று புத்தகங்கள்  குறிப்பிட்டுள்ளனர்.

•  இக்கோயில் மங்களநாதர் மங்களநாயகி இதுவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் அதற்கான முழுமையான பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

•   இங்குள்ள மூலவருக்கு மங்களநாதர் , மங்களேஸ்வரர் , காட்சி கொடுத்த நாயகர்,  பிரளயாகேசுவர் என்னும் பெயர்களும் உள்ளன.

•  இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை , சுந்தரநாயகி போன்ற பல பெயர்களும் உள்ளன.

•  இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. மண்டோதரி பிறந்த இடமும் இந்த உத்தரகோசமங்கை தான் என்றும் குறிப்பிடுகின்றனர்.

இந்த குறிப்பின் மூலம் இத்தலம் இராமாயணத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட ஆலயம் என்று வரலாற்று ஆசிரியர்களால் ஆராயப்படுகிறது.

•  இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம்.

•   இக்கோயிலில் ஆதிகாலத்து வராகிக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

•  பிரதோஷ நாளன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகிறார்கள். காரணம் இக்கோவில் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை கட்டி வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களில் இருந்தும் விடுபடலாம் என்பது ஐதீகம் .

•  இத்தலத்தில் உள்ள கோயில் குளத்தில் உள்ள மீன்கள் கடல் வாழ் மீன்களாகும்.

•  சிவபெருமானால் பரதநாட்டியக் கலையை முதல்முதலாக உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இடம் இத்தலம் ஆகும்.

Sunday, September 27, 2020

அதிசயம் நிறைந்த ஆலயங்கள்

இந்து கோவில்களில் பல்வேறு அதிசயங்கள் நிறைந்துள்ளது. இந்த வகையில் சில அதிசயம் நிறைந்த கோவில்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர்.

இங்குள்ள நூற்று ஒன்று சாமி மலை மீது உள்ள குகையில் ஒரு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு இருக்கிறது.

இதில் இளநீர் விட்டு தீபமேற்றினால் அது பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம்.

ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும்.

சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும். அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில், 6 நாழிகைக்கு ஒரு முறை சிவலிங்கம் வர்ணம் மாறுகிறது.

திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயத்தையும் இங்கே பார்க்கலாம்.

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததும், தாமரை மலரைக் கொண்டு சிவபூஜை செய்தார், முருகப்பெருமான். அதை உணர்த்தும் வகையில் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது.

Saturday, September 26, 2020

திருவண்ணாமலை கோவில்

திருவண்ணாமலைக்கு “நவதுவார பதி” என்றும் ஒரு பெயர் உண்டு.

அதற்கு 9 நுழைவாயில்களைக் கொண்ட நகரம் என்று அர்த்தமாகும். திருவண்ணாமலைக்கும் 9 என்ற எண்ணுக்கும் நிறைய தொடர்பு உண்டு.

அதில் ஒன்று, திருவண்ணாமலை ஆலயத்தில் 9 கோபுரங்கள் இருப்பதாகும்.

இந்த 9 கோபுரங்களில் 4 கோபுரங்கள் பெரியது. 5 கோபுரங்கள் “கட்டை கோபுரம்” என்றழைக்கப்படும் சிறிய கோபுரங்களாகும். அந்த 9 கோபுரங்கள் விபரம் வருமாறு:-

1. ராஜகோபுரம் (கிழக்கு), 
2. பேய்க் கோபுரம் (மேற்கு),
3. திருமஞ்சன கோபுரம் (தெற்கு), 
4. அம்மணியம்மாள் கோபுரம் (வடக்கு), 
5. வல்லாள மகாராஜா கோபுரம், 
6. கிளி கோபுரம்,
7. வடக்கு கட்டை கோபுரம், 
8. தெற்கு கட்டை கோபுரம்,
9. மேற்கு கட்டை கோபுரம்.

*1. ராஜகோபுரம்*

திருவண்ணாமலை ஆலயத்தில் கிழக்கு திசையில் கம்பீரமாக ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோபுரத்துக்கு ராயர் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு.

தென்னகத்தில் மிகப்பெரும் ஆன்மிக பணி செய்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இந்த கோபுரத்தை கட்டுவதற்கு அடித்தளம் அமைத்தார் என்பதால் அவர் பெயரால் இந்த கோபுரம் அழைக்கப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்த கோபுரம்தான் தமிழ்நாட்டிலேயே மிக உயர்ந்த கோபுரமாக திகழ்ந்தது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. தஞ்சையை ஆண்ட ராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோவிலை அமைக்கும்போது கருவறை கோபுரத்தை 216 அடிகள் உயரம் கொண்டதாக அமைத்து இருந்தார்.

அவருக்கு பிறகு 15-ம் நூற்றாண்டில் தென்னகத்தை ஆண்ட கிருஷ்ண தேவராயர் தனது வெற்றிகளுக்கு நினைவாக திருவண்ணா மலையில் பிரமாண்டமான ராஜகோபுரத்தை அமைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

ராஜராஜன் சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட அதிக உயரம் கொண்டதாக திருவண்ணாமலை ஆலயத்தின் ராஜகோபுரம் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

1550களில் அந்த ராஜ கோபுரத்தை கட்டும் பணியை கிருஷ்ண தேவராயர் தொடங்கி தீவிரப்படுத்தி இருந்தார்.

135 அடி நீளம், 98 அடி அகலத்தில் அடித்தளம் அமைத்து ராஜகோபுரத்தை அவர் எழுப்பினார். ஆனால்

அதன் பணிகள் முடிவதற்குள் அவர் காலம் முடிந்து விட்டது. இதையடுத்து அந்த ராஜகோபுரத்தை கட்டும் படி சிவநேசர், லோகநாதர் என்ற முனிவர்கள் தஞ்சையை ஆண்ட செவ்வப்ப நாயக்கரிடம் தெரிவித்தனர். அதை ஏற்று செவ்வப்ப நாயக்கர் திருவண்ணாமலை ராஜ கோபுரத்தை கட்டி முடித்தார்.

கிருஷ்ணதேவராயரின் ஆசைப்படி தஞ்சை பெரிய கோவில் கோபுரத்தை விட ஒரு அடி உயரமாக 217 அடி உயரத்துடன் திருவண்ணாமலை ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

ஆங்கிரச ஆண்டு கார்த்திகை மாதம் புதன்கிழமை பவுர்ணமி ரோகிணி நட்சத்திர நாளில் அந்த ராஜகோபுரத்தில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த ராஜகோபுரம் பார்க்க பார்க்க கண்களுக்கு சலிப்பே தராத சிறப்பை கொண்டது. எவ்வளவு நேரம் பார்த்தாலும் ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும்.

தஞ்சை பெரிய கோவில் கோபுரம் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி அமைக்கப்பட்டது என்று சொல்வார்கள்.

அதேபோன்றுதான் இந்த கோபுரமும் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு சாரம் கட்டி பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு வந்து அழகுற கட்டி முடிக்கப்பட்டதாகும். கோபுரத்தின் கீழ் பகுதி கற்களாலும் மேற்பகுதி செங்கல் மற்றும் சுதையாலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

11 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் விஜயநகர மன்னர்களின் கட்டிட கலை அம்சங்களை அதிகமாக காணலாம். கோபுரத்தின் சுற்றுப்பகுதிகளில் நிறைய நாட்டிய சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

விநாயகர், முருகர், பிரம்மா, துர்க்கை, காளை வாகனம், மயில்மேல் அமர்ந்த முருகன், அன்னபறவை, லிங்கத்திற்கு பால் வார்க்கும் பசு உள்பட பல்வேறு சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.

கோபுரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள பூதகனங்களும் கண்களுக்கு விருந்து கொடுப்பதாக உள்ளன.

கோபுரத்தின் இடது பக்கத்தில் செல்வகணபதி சிலை உள்ளது. விறன்மிண்ட நாயனாரின் சிலையும் இடம் பெற்றுள்ளது. ஆங்காங்கே மன்னர் காலத்து கல்வெட்டுகளும் உள்ளன. அந்த காலத்தில் வாழ்ந்த புலவர்கள் இந்த கோபுரத்தின் அழகை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களும் கல்வெட்டுகளாக உள்ளன.

அந்த காலத்தில் இறந்தவர்களின் 16-வது நாள் தினத்தன்று மோட்ச தீபம் ஏற்றி வழிபடுவார்கள். திருவண்ணாமலை மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்த ராஜகோபுரத்தின் ஒரு பகுதியில் மோட்ச தீபம் ஏற்றுவதை வழக்கத்தில் வைத்திருந்தனர். சமீப காலமாக இந்த பழக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

*2. பேய்க்கோபுரம்*

ராஜகோபுரத்திற்கு நேரே மேற்கு பகுதியில் பேய்க்கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் மலையை பார்த்தப்படி இருப்பதால் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

ராஜகோபுரத்தை கட்டுவதற்கு கிருஷ்ணதேவ ராயர் திருப்பணிகள் தொடங்கியபோதே இந்த மேற்கு கோபுரத்தை கட்டுவதற்கும் திருப்பணிகளைத் தொடங்கி நடத்தினார். இந்த கோபுரத்தின் பணிகளையும் செவ்வப்ப நாயக்கர்தான் கட்டி முடித்தார்.

இதன் உயரம் 160 அடியாகும். இந்த மேற்கு கோபுரம் பேச்சு வழக்கில் மேக்கோபுரம் என்று மாறியது. பிறகு அது பேக்கோபுரம் என்று பேசப்பட்டது.

கடந்த நூற்றாண்டில் பேக்கோபுரம் என்பதை மக்கள் தவறாக பேசி பேசியே பேய்க்கோபுரம் என்று அழைக்க தொடங்கி விட்டனர்.

மற்றபடி பேய்க்கும் இந்த கோபுரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 9 நிலைகள் கொண்ட இந்த கோபுரத்தில் மகிசாசூரணை துர்க்கை வதம் செய்யும் காட்சி, காளை வாகனத்தில் அமர்ந்த சிவன், உமை அம்மை, பிரம்மா, முருகன், சரபேஸ்வரர், முனிவர்கள், பூதகனங்கள் இடம் பெற்றுள்ளனர்.

*3. திருமஞ்சன கோபுரம்*

திருவண்ணாமலை ஆலயத்தின் தெற்கு திசையில் திருமஞ்சன கோபுரம் அமைந்துள்ளது. அந்த காலத்தில் திருமஞ்சனம் செய்வதற்காக யானை மீது புனித நீரை இந்த வாசல் வழியாகத்தான் எடுத்து வருவதை வழக்கத்தில் வைத்திருந்தனர்.

எனவே இந்த கோபுரத்திற்கு திருமஞ்சன கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது. சுமார் 150 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தை யார் கட்டியது என்று தெரியவில்லை.

எந்த நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் தெரியவில்லை. ஆனால் ஏராளமான அழகு சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்ததாக இந்த கோபுரம் திகழ்கிறது.

ராஜகோபுரத்திற்கு அடுத்தப்படியாக இந்த கோபுரத்திற்கும் சில சிறப்புகள் உண்டு. ஆனி மாதம் நடைபெறும் ஆனி திருமஞ்சனம், மார்கழி மாதம் நடைபெறும் ஆரூத்ரா தரிசனம் ஆகிய இரு விழாக்களின் போது இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை வீதி உலாவிற்கு எடுத்து செல்வார்கள்.

அதுபோல வீதி உலா முடிந்த பிறகு இந்த கோபுரம் வழியாகத்தான் நடராஜரை உள்ளே அழைத்து வருவார்கள். இந்த கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள இசைவானர்கள் சிற்பம் மிகுந்த சிறப்பு பெற்றது.

*4. வல்லாள மகாராஜா கோபுரம்*

இந்த கோபுரத்தை வீர வல்லாள மகாராஜா கட்டினார். 1318-ம் ஆண்டு தொடங்கி 1340-ம் ஆண்டு இந்த கோபுரத்தின் கட்டுமானப்பணி முடிந்ததாக ஒரு தகவல் உள்ளது. எனவே இந்த கோபுரத்திற்கு வீர வல்லாள திருவாசல் என்ற ஒரு பெயரும் உண்டு.

ராஜகோபுரத்தை தாண்டியதும் அடுத்து வருவது இந்த கோபுரம்தான். இந்த கோபுரத்தின் கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பம் கை கூப்பிய நிலையில் இருப்பதை காணலாம்.

இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர் சிற்பங்களுடன் கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் சிவபெருமான், காளை மீது அமர்ந்த சிவபார்வதி, சமணரை கழுவேற்றம் செய்யும் சிற்பங்களும் உள்ளன. லிங்கத்தை பார்வதி தழுவி நிற்பது போன்ற சிற்பமும் இடம்பெற்றுள்ளது.

அண்ணாமலையார் தனது மகனாக வல்லாள மகாராஜாவை ஏற்றுக் கொண்ட சிறப்பை இந்த உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த கோபுரம் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

*5. கிளி கோபுரம்*

திருவண்ணாமலையில் வாழ்ந்த அருணகிரி நாதர் பற்றி சிவ பக்தர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

அவரோடு தொடர்புடையது இந்த கிளி கோபுரமாகும். திருவண்ணாமலை தலத்தில் உள்ள கோபுரங்களில் இது மிக மிக பழமையானதாகும்.

1053-ம் ஆண்டு இந்த கோபுரத்தை ராஜேந்திர சோழன் கட்டினார். சுமார் 140 அடி உயரம் கொண்ட இந்த கோபுரம் 5 நிலைகளை கொண்டது. இந்த கோபுரத்தின் உச்சியில் கிளி சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது.

அருணகிரி நாதர் கிளி உருவம் எடுத்து தேவலோகம் சென்ற போது அவரது உடலை சம்பந்தாண்டான் என்பவன் எரித்து விட்டான். இதனால் அருணகிரிநாதர் கிளி உருவில் அலைய வேண்டியதாற்று.

அவர் கிளி உருவத்தோடு இந்த கோபுரத்தில் அமர்ந்து நிறைய பாடல்களை பாடினார்.

கந்தர் அனுபூதி, சுந்தர அந்தாதி ஆகிய இலக்கியங்கள் இந்த கோபுரத்தில் கிளி உருவத்தில் அமர்ந்த அருணகிரிநாதரால் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த கோபுரத்திற்கு கிளி கோபுரம் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த கோபுரத்தில் 33 கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆனால் அவற்றை இன்னமும் வெளியில் கொண்டு வர முடியவில்லை.

*6. தெற்கு கட்டை கோபுரம்*

திருமஞ்சன கோபுரம் அருகே 5 நிலைகளுடன் உள்ள சிறிய கோபுரம் தெற்கு கட்டை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. 70 அடி உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் புராண நிகழ்ச்சிகளை விளக்கும் சிற்பங்கள் அமைந்துள்ளன.

*7. மேற்கு கட்டை கோபுரம்*

பேய் கோபுரத்திற்கு அடுத்தப்படியாக அமைந்துள்ள சிறிய கோபுரமாகும். 5 நிலைகளை கொண்ட இந்த கோபுரம் 70 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த கோபுரத்தில் திசை காவல் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.

*8. வடக்கு கட்டை கோபுரம்*

அம்மணியம்மன் கோபுரத்தை அடுத்து இந்த சிறிய கோபுரம் உள்ளது. 70 அடி உயரம் உள்ள இந்த கோபுரத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், துவார பாலகர்கள் சிற்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தில் உள்ள நடன பெண்மணிகளின் சிற்பங்கள் மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளன.

*9. அம்மணியம்மாள் கோபுரம்*

திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு திசையில் இந்த கோபுரம் அமைந்துள்ளது. அம்மணிம்மாள் என்ற பெண் சித்தர் உருவாக்கிய கோபுரம் இது.

Sunday, May 17, 2020

உங்கள்_வாழ்க்கையில்_நல்ல_திருப்பம்_ஏற்பட_வேண்டுமா? - திருச்செந்தூர்


#உங்கள்_வாழ்க்கையில்_நல்ல_திருப்பம்_ஏற்பட_வேண்டுமா?

அப்படியென்றால் நீங்கள் அவசியம் 
திருச்செந்தூர் ஆலயத்தில்  தினமும் அதி காலையில் நடைபெறும் கொடிமர பூசையில் கலந்து கொள்ள வேண்டும்.

அப்படி என்ன திருச்செந்தூர் ஆலய கொடிமர பூஜையில் விசேஷம் உள்ளது என யோசிக்கின்றீர்களா?

திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும்
 மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின்  கொடிமரத்துக்குத்தான் 
பூஜை நடைபெறும் .

இந்தக் கொடி மரம் பொதிகை மலையிலிருந்து வரப்பெற்ற 
சந்தன மரமாகும்

இந்தக் கொடிமரம் சந்தனக் கொடிமரம் என்பது பல பேருக்குத் தெரியாது.

இந்த கொடிமரம் திருச்செந்தூர் ஆலயத்திற்கு வந்த வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோமா?

திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை!

முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை. 

காரணம் அங்கு கொடிமரம் இல்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர். 

உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர். 

திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர். 

அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர். 

அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார்.

அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்தது.

பயந்து போய் படபடத்து போன ஆசாரி, அம்மனே! ஏன் இந்த நிலை. தங்கள் கண்களில் நீர் வழிய காரணம் தான் என்ன? என்று கேட்டார். 

அம்மன் ‘மகனே நீங்கள் செய்யும் பணி நல்ல பணி தான். ஆனால் அந்த பணியில் ஈடுபடும் உன்னை தவிர வேறு யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள். 

அதை நினைத்து தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இதை நீ அவர்களிடம் சொல்லிவிடாதே. 

இது ஆண்டவன் கட்டளை. இந்த நிலை தெரிந்த காரணத்தினால் தான் என கண்களில் கண்ணீர் வந்தது’ என்று கூறினார்.

உடனே அதிர்ந்து போன ஆறுமுகம் ஆசாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். 

இதை வெளியே உள்ளவர்களிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தெய்வக்குத்தமாகி விடும். 

அதே நேரம் நம்பி நம்மோடு வருபவர்களை காப்பாற்ற வேண்டும். என்ன செய்ய என்று குழம்பினார். 

ஆயினும் கலங்காமல் முருகன் மீது பாரத்தை போட்டு விட்டு களக்காடு அருகே உள்ள ஏர்வாடிக்கு வந்தார். 

அங்கு சின்னதம்பி மரக்காயர் என்ற மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அவரிடம் முருகப் பெருமானுக்கு கொடிமரம் வெட்ட வந்த கதையை கூறி உதவிக்கு கூப்பிட்டனர்.

சின்னதம்பி மரக்காயரின் மனைவி பாத்திமாபீவி அவரை தடுத்தார். 

"நான் நேற்று முன்தினம் இரவு பயங்கர கனவு கண்டேன். அதில் உமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அறிகுறி காட்டுகிறது. 

எனவே கொடிமரம் வெட்ட நீங்கள் செல்ல வேண்டாம”| என்று கூறினாள். 

ஆனால் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. மனைவி உடனே அழுதாள், "நமது குடும்பம் உம்மை நம்பித்தான் உள்ளது. தயவு செய்து செல்ல வேண்டாம்” என்று தடுத்து கூறியும் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. 

விதி யாரை விட்டது. 

அவர் ஆறுமுகம் ஆசாரி குழுவினருடன் களக்காட்டு 
மலைக்கு சென்றார்.

அவர்கள் திருச்செந்தூரில் இருந்தே 21 மாட்டு வண்டிகளில் வந்து இருந்தார்கள். 

அந்த வண்டிகள் அணிவகுத்து களக்காடு மலையை நோக்கி சென்றது. 

ஆனால் அவர்களுக்கு தேவையான கொடிமரம் கிடைக்கவில்லை.

அலைந்து திரிந்து பார்த்தார்கள் பக்கத்தில் எந்த இடத்திலும் சரியான மரம் கிடைக்கவில்லை. 

எனவே காக்காச்சி மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலை உச்சிக்கு சென்றனர். 

அங்கு அற்புதமான நல்ல 
உயரமான சந்தனமரம் 
ஒன்று இருந்தது.

''ஆகா இந்த மரம் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏற்ற கொடிமரம'' என்றார்.ஆறுமுக ஆசாரி. 

அவர், சின்னதம்பி மரக்காயரிடம் இம்மரத்தை பற்றி கேட்கிறார். ரம்மியமான வாசனையுடன் இருக்கும் அந்த அற்புத மரத்தை குறித்து மை போட்டு பார்க்கிறார் மாந்திரிகரான சின்ன தம்பி மரக்காயர். 

அப்போது அந்த மரத்தில் அடி மரத்தில் சுடலைமாடனும், மேல் முனையில் சங்கடகாரனும் உள்பட 21 தேவதைகள் இருந்தது தெரிய வந்தது.

அந்த 21 தேவதைகளையும் விரட்டி விட்டு தான் மரத்தினை வெட்ட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர். 

முதலில் மந்திரம் மூலம் தேவதைகளை விரட்ட மை போட்டார் மரக்காயர்.

மற்றவர்களை கோடாரி கொண்டு வெட்ட சொன்னார். 

கோடாரி மூலம் வெட்டப்பட்ட மரம் கோடாரியை திருப்பி விட்டது. 

உடனே அந்த கோடாரி மரத்தை வெட்டிய 20 பேர்களின் கழுத்தில் பட்டது. 

அலறியபடி 20 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மரணம் அடைந்தனர். 

இதனால் ஆறுமுக ஆசாரி அதிர்ச்சி அடைந்தார்.

ஐயோ நான் என்ன செய்வேன்? என்று மந்திரவாதி சின்னதம்பி மரக்காயரிடம் சென்ற போது அவரும் ரத்தம் கக்கி இறந்து இருந்தார். 

அடுத்த வினாடி ஆறுமுக ஆசாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. 

இதற்கிடையில் அந்த மரத்தில் இருந்த 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு கீழே இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டியது. 

உயிருக்கு பயந்த அவர் காக்காச்சி மலையை விட்டு ஓடினார். அடுத்து பொதிகை மலைக்கு வந்தார். 

அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார்.

இறுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து அய்யனார் காலை பற்றிக் கொண்டு காப்பாற்ற கூறி கத்தினார். 

சொரிமுத்து அய்யனார் 21 மாடதேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்தார். 

‘முருகன்.. எனது சகோதரன் தான்.. அவன் கோவிலுக்கு தானே கொடிமரம் செல்கிறது. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்’ என்று கூறினார். 

அதற்கு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் நாங்கள் வசிப்பதற்கு இது போன்ற வேறு சந்தன கொடிமரம் இல்லை என்றும்,திருச்செந்தூர் ஆலயத்தில் இந்த கொடிமரம பிரதிஷ்டை செய்யபட்ட பின்பு தங்களை தொடந்து இந்த கொடி மரத்திலேயே வாசம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும்,தங்களுக்கு முதல் பூஜை நடத்திய பின்பே மூலவருக்கு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சொரி முத்தையனாரிடம் வேண்டினர்.

சொரி முத்தையனாரும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் 
அந்த சந்தன மரத்தை அவர்களே வெட்டி  அதை திருச்செந்தூரில் கொண்டு சேர்த்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் அவர்களை அந்த கொடிமரத்திலேயே தொடந்து 
வாசம் செய்து கொள்ளும்படியும்  உத்தரவிட்டார்.

அதன்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை வெட்டினார்கள். 

பின் 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டினர். அந்த சந்தன மரத்தை அப்படியே தூக்கி வைத்து திருச்செந்தூர் நோக்கி கொண்டு சென்றார்கள். 

அம்மரமே தற்போது திருச்செந்தூரில் கொடி மரமாக வைக்கப்பட்டுள்ளது. 

சொரி முத்தையனார் உத்திரவின்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இந்த கொடிமரத்தில. வாசம் செய்து வருகின்றனர்.

இப்போதும் திருச்செந்தூர் ஆலய்த்தில் மாசி திருவிழா நடைபெறும் போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும், சங்கடகரகாரனுக்கும் படைத்து விட்டுத்தான் தேர் ஒட வேண்டிய வேலைகளை செய்வார்கள். 

மாசி திருவிழா தேர் ஓடும் போது அதிலேயும் சங்கடகரகாரன் தேர் மேல் ஏறி "சரி போகலாம்" என்று கூறியவுடனேதான் தேர் நகரும்.

மேற்கண்ட தகவலை "கொடி மரக்காவியம்" என்றும் வில்லுப்பாட்டு கதையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள கிளாக்குளம் கிராமத்து வில்லுப்பாட்டு கலைஞர் சண்முக சுந்தரம் கூறியுள்ளார்.

இந்த கதை நெஞ்சை பதற வைப்பது போல் உள்ளது அல்லவா? 

திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள கொடிமரம் பிரமாண்டமானது. 

அதை 21 மனிதர்கள் கொண்டு வருவது என்பது இயலாதது. 

ஆனால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் சேர்ந்து அந்த மரத்தினை வெட்டி  
21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டி அதில் தூக்கி வைத்து வந்த சம்பவம் ஒரு மலைப்பான விசயமாக இருப்பதாலும் இதை நம்பியே தீர வேண்டும்.

ஏன் என்றால் இப்போது போல் முன்பு போக்குவரத்து வசதி எல்லாம் கிடையாது. 

எனவே 21 மாட்டு வண்டி நேராக திருச்செந்தூர் நோக்கி வரும் போது சாலையில் தடை எதுவும் இருந்திருக்காது. 

சொரிமுத்து அய்யனாரின் ஆசியுடன் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இன்றளவும் வாசம் செய்து வரும் பொதிகை மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட சந்தனமரமே தற்போது திருச்செந்தூரில் கொடிமரமாக இருப்பதால் இந்த கொடி மரத்திற்கு முதலில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே மூலவருக்கான நடை திறக்கபட்டு நிர்மால்யம், அபிஷேகம் மற்ற பூஜை எல்லாம் நடைபெற்று வருகிறது..

தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமரத்துக்கு பூஜைகள் நடைபெறும்போது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும்  நமஸ்காரம் செய்வார்கள். 

இதற்கான அனுமதி இலவசம். 

அதிகாலையில ் நடைபெறும் இந்த கொடிமர பூஜையில் கலந்து கொண்டால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளின் ஆசிகள் கிடைக்கப்பெற்று உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படுவது என்பது உறுதி!

இந்தக் கொடிமர பூஜையில் நீங்கள் கலந்துகொண்டால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல திருப்பம் உண்டாகும்.

நம்பிக்கையுடன் இந்தக் கொடிமர பூஜைக்கு போய்த் தான் பாருங்களேன்..!🌹🙏🏻🌼🌺 ஓம் முருகா

Sunday, May 10, 2020

இரவில் அதிக நேரம் முகநூல், வாட்ஸ்சப், இணையதளத்தில் பொழுதை களிக்கும் உங்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வர காத்திருக்கிறது என்று தெரியுமா உங்களுக்கு??எனில் இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!!


ஆழமான பினியல் சுரப்பி பற்றிய ஒரு அபூர்வ ரகசியத்தை உங்களுடன் பகிர்கிறேன்..... சிந்தித்து உங்கள் உடலுக்கு இரவில் பூரண ஓய்வு கொடுங்கள்.....

நமது உடல் ஓர் அற்புத படைப்பு. அதில் ஆச்சரியப்படத்தக்க பல அம்சங்கள் உள்ளன!!...

அதில் ஒன்றுதான் நமது உடலில் நேரத்தை தானாகவே ஒழுங்கு படுத்தும் உயிரியல் நேர முறைமை (Biological Clock System)!!!

இதனை வழி நடத்தும் ஒரு சுரப்பி நம் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ளது. அதுதான் பினியல் சுரப்பி!

கடலை உருண்டை வடிவில் இருக்கும் இந்த PINEAL GLAND பார்வை நரம்புடன் இணைக்கப் பட்டுள்ளது!!

இந்த பினியல் சுரப்பி; ஓர் அரிய பொருளை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கிறது!!

அதுதான் மெலடோனின் (melatonin)!!

இந்த அதிசய அரிய பொருளின் பலன் மகத்தானது! புற்று நோயைக் குணப்படுத்தும் இயற்கை மருந்து இந்தப் பொருளில் இருக்கிறது.

மெலடோனின் சுரக்க வேண்டும் என்றால்; ஒரே ஒரு நிபந்தனை.
இரவின் இருளாக இருக்க வேண்டும்!!

இரவின் இருளில்தான் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்கும்!!

அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பார்வை நரம்பு மூலமாக; அது இரவின் இருளை அறிந்து கொள்ளும்!!

ஒவ்வொரு நாளும் இரவு 10க்குப் பிறகு இருளில் சுரக்கும். மெலடோனின், நமது இரத்த நாளங்களில் பாய்ந்தோடும்.!!

நமது கண்கள் வெளிச்சத்தில் பட்டுக் கொண்டிருந்தால் பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்காது!!

பினியல் சுரப்பி மெலடோனினை சுரக்க ஆர்மபித்து காலை 5 மணிக்கு நிறுத்தி விடும்!!.

இரவு நீண்ட நேரம் கண் விழித்திருந்தால் நாம் புற்று நோயைக் குணப்படுத்தும் மெலடோனின் என்ற இயற்கை மருந்தை இழந்தவர்களாக இருப்போம்!!!!.

எனவே இரவு முன்கூட்டியே உறங்கி அதிகாலையில் எழுவது புற்று நோயைத் தடுக்கும் என்று இயற்கை மருத்துவ உலக சித்தர்கள் நூல் கூறுகிறது!!

அதே போன்று; அதிகாலையில் காற்று வெளி மண்டலத்தில் ஓஸோன் நிறைந்திருக்கும்.

ஒரு மனிதன் அதிகாலையில் எழுந்து நடமாட ஆரம்பித்தால்:; இந்த ஓஸோன் காற்றை அவன் சுவாசிப்பான்.!!

இது நமது உடலிலுள்ள நோய்களைக் குணப்படுத்தி, நம் ஆயுளை அதிகரிக்கும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்!!

இரவு முன்கூட்டியே உறங்குவதால்; மெலடோனின் கிடைக்கிறது! அதிகாலையில் எழுந்து அலுவல்களைத் துவங்குவதால்; ஓஸோன் கிடைக்கிறது!!

நமது உடலின் ஆரோக்கியம் அனைத்தும் இவற்றில் அடங்கியிருக்கிறது.

அதிகாலையின் சில மணி நேரங்கள் அந்த நாளின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கக் கூடியவையாக இருக்கின்றன!!

அதிகாலையில் எழும் போது; நமது மூளையும், இன்னபிற உறுப்புகளும் பூரண ஓய்வு பெற்று வேலை செய்ய தயாராக இருக்கும்!!

அந்த நேரத்தில் செய்யும் பணிகள் அனைத்தும் திறமை மிக்கதாகவும், ஆற்றல் அழுத்தம் மிக்கதாகவும் திகழும்!!

எனவே முன் எழுந்து முன் மறையும் அதிசய மெலடோனினைப் பெறவும், அதிகாலைப் பொழுதின் ஓஸோனைப் பெற்று பயனடைவோம்.

Tuesday, May 5, 2020

ஆண்டிகள் மடம் கட்டிய கதை - திருச்செந்தூர்


ண்டிகள் மடம் கட்டிய கதை என்று கூறுவார்கள் ஆனால் உண்மையிலேயே ஆண்டிகளால் உலகமே வியக்கத்தக்க வகையில் கட்டப்பட்டுள்ளது அருள்மிகு திருசெந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம்

🌺 பொதுவாக யாரும் கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டுவதில்லை. தென் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள அசுரரை வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் - ஒரு கட்டிடக் கலை அதிசயம் !.

🌺 கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும். 

🌺 அப்படியே கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.

🌺 ஆனால், திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 

🌺 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது.

🌺 எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.

🌺 திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.

🌺 இவ்வளவு ஆபத்தான இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் மூழ்கடித்து விடுகிறது 

🌺 திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டியவர்வகளும் புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகளை நீங்கள் அறிவீர்களா 

1. #மௌனசுவாமி

2. #காசிசுவாமி 

3. #ஆறுமுகசுவாமி
இவர் ராஜகோபுரம் கட்டியவர்

4. #ஸ்ரீவள்ளிநாயகசுவாமி

5. #தேசியமூர்த்திசுவாமி. 
எனும் இந்த ஐந்து ஆண்டிகள்தான்!!

🌺 தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும்  நிலையில் ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். 

🌺 இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம்... 

தரிசனம் செய்ய செல்லும் வழி :-

முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே #மூவர்_சமாது என்ற பெயருடனே அமைந்துள்ளது நல்ல அமைதியான இடம்

#நான்காவதாக, 
ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலுருந்து  சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.

#ஐந்தாவதாக, 
ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு  என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும்.

முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது  ஜீவசமாதி இருக்கும் இடம் பலருக்கும் தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை.  

அடியாருக்கு அடியார் கந்தக் கடவுள் அவரின் கோவில் திருப்பணியை செய்தவர்களை தரிசிக்கும் பாக்கியம் எல்லோருக்கும் அமைவதில்லை இவர்களை தரிசனம் செய்பவர்கள் முருகனின் முழு அருளை முழுமையாக பெற முடியும்.

Sunday, April 26, 2020

Welcome to all
Announcements and Events
Help us to Provide Free medical Support for the needy* Hello Friends The rural population is in desperate need of medical care, because they are all day laborers and their salaries are not enough for the family. So good minds who are facilitated should help. We required fund for free medical camp for poor people's and daily wages people's in remote villages...,We offering.. Free medical camp's includes...., 1) Free eye camp 2) Free teeth check up camp 3) Free full body check up camp for elderly women and men also..., 4) AIDS Awareness programme 5) Free Cancer test and Cancer prevention awareness programme 6) Free Ambulance service for Remote village from city. *Read More: *Donate Here:

Saturday, April 11, 2020

தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள் :


ண, ன பொருள் வேறுபாடு

அணல் - தாடி, கழுத்து
அனல் - நெருப்பு
அணி - அழகு
அனி - நெற்பொறி
அணு - நுண்மை
அனு - தாடை, அற்பம்
அணுக்கம் - அண்டை, அண்மை.
அனுக்கம் - வருத்தம், அச்சம்
அணை - படுக்கை, அணைத்துக்
கொள்ளுதல்
அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய
அனைய - அத்தகைய
அண்மை - அருகில்
அன்மை - தீமை, அல்ல
அங்கண் - அவ்விடம்
அங்கன் - மகன்
அண்ணம் - மேல்வாய்
அன்னம் - சோறு, அன்னப்பறவை
அண்ணன் - தமையன்
அன்னன் - அத்தகையவன்
அவண் - அவ்வாறு
அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
ஆணகம் - சுரை
ஆனகம் - துந்துபி
ஆணம் - பற்றுக்கோடு
ஆனம் - தெப்பம், கள்
ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணேறு -ஆண்மகன்
ஆனேறு - காளை, எருது
ஆண் - ஆடவன்
ஆன் - பசு
ஆணை - கட்டளை, ஆட்சி
ஆனை - யானை
இணை - துணை, இரட்டை
இனை - இன்ன, வருத்தம்
இணைத்து - சேர்த்து
இனைத்து - இத்தன்மையது
இவண் - இவ்வாறு
இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
ஈணவள் - ஈன்றவள்
ஈனவள் - இழிந்தவள்
உண் - உண்பாயாக
உன் - உன்னுடைய
உண்ணல் - உண்ணுதல்
உன்னல் - நினைத்தல்
உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
உன்னி - நினைத்து, குதிரை
ஊண் - உணவு
ஊன் - மாமிசம்
எண்ண - நினைக்க
என்ன - போல, வினாச்சொல்
எண்ணல் - எண்ணுதல்
என்னல் - என்று சொல்லுதல்
எண்கு - கரடி
என்கு - என்று சொல்லுதல்
ஏண் - வலிமை
ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
ஏணை - தொட்டில்
ஏனை - மற்றது
ஐவணம் - ஐந்து வண்ணம்
ஐவனம் - மலை நெல்
ஓணம் - ஒரு பண்டிகை
ஓனம் – எழுத்துச்சாரியை
கணகம் - ஒரு படைப்பிரிவு
கனகம் - பொன்
கணப்பு - குளிர்காயும் தீ
கனப்பு - பாரம், அழுத்தம்
கணி - கணித்தல்
கனி - பழம், சுரங்கம், சாரம்
கணம் - கூட்டம்
கனம் -பாரம்
கண்ணன் - கிருஷ்ணன்
கன்னன் - கர்ணன்
கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு
ராசி
கணை - அம்பு
கனை - ஒலி, கனைத்தல்
கண் - ஓர் உறுப்பு
கன் - கல், செம்பு, உறுதி
கண்று - அம்பு
கன்று - அற்பம், இளமரம், குட்டி,
கைவளை
கண்ணல் - கருதல்
கன்னல் - கரும்பு, கற்கண்டு
காண் - பார்
கான் - காடு, வனம்
காணம் - பொன், கொள்
கானம் - காடு, வனம், தேர், இசை
காணல் - பார்த்தல்
கானல் - பாலை
கிணி - கைத்தாளம்
கினி - பீடை
கிண்ணம் - வட்டில், கிண்ணி
கின்னம் - கிளை, துன்பம்
குணி - வில், ஊமை
குனி - குனிதல், வளை
குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
குனித்தல் - வளைதல்
குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
குனிப்பு - வளைப்பு, ஆடல்
கேணம் - செழிப்பு, மிகுதி
கேனம் - பைத்தியம், பித்து
கேணி - கிணறு
கேனி - பித்துப் பிடித்தவர்
கோண் - கோணல், மாறுபாடு
கோன் - அரசன்
சாணம் - சாணைக்கல், சாணி
சானம் - அம்மி, பெருங்காயம்
சுணை - கூர்மை, கரணை
சுனை - நீரூற்று
சுண்ணம் - வாசனைப்பொடி
சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
சேணம் - மெத்தை
சேனம் - பருந்து
சேணை - அறிவு
சேனை - படை
சோணம் - பொன், சிவப்பு, தீ,
சோணகிரி
சோனம் - மேகம்
சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
சோனை - மழைச்சாரல், மேகம்
தண் - குளிர்ச்சி
தன் - தன்னுடைய
தணி - தணித்தல்
தனி - தனிமை
தாணி - தான்றிமரம்
தானி - இருப்பிடம், பண்டசாலை,
தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
தானு - காற்று
திணை - ஒழுக்கம், குலம்
தினை - தானியம், ஒருவகைப்
புன்செய்ப்பயிர்
திண்மை - உறுதி
தின்மை - தீமை
திண் - வலிமை
தின் - உண்
துணி - துணிதல், கந்தை
துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்
தெண் - தெளிவு
தென் - தெற்கு, அழகு
நண்பகல் - நடுப்பகல்
நன்பகல் - நல்லபகல்
நணி - அணி (அழகு)
நனி - மிகுதி
நாண் - வெட்கம், கயிறு
நான் - தன்மைப் பெயர்
நாணம் - வெட்கம்
நானம் - புனுகு, கவரிமான்
பணி - வேலை, கட்டளையிடு
பனி - துன்பம், குளிர், சொல், நோய்
பணை - முரசு, உயரம், பரந்த
பனை - ஒருவகை மரம்
பண் - இசை
பன் - அரிவாள், பல
பண்ணை - தோட்டம்
பன்னை - கீரைச்செடி
பண்ணுதல் - செய்தல்
பன்னுதல் - நெருங்குதல்
பண்ணி - செய்து
பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்
பண்மை - தகுதி
பன்மை - பல
பணித்தல் - கட்டளையிடுதல்
பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த
பட்டணம் - நகரம்
பட்டினம் - கடற்கரை நகர்
பாணம் - நீருணவு
பானம் - அம்பு
புணை - தெப்பம்
புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை
புண் - காயம்
புன் - கீழான
பேணம் - பேணுதல்
பேனம் - நுரை
பேண் - போற்று, உபசரி
பேன் - ஓர் உயிரி
மணம் - வாசனை, திருமணம்
மனம் - உள்ளம், இந்துப்பு
மணை - மரப்பலகை, மணவறை
மனை - இடம், வீடு
மண் - தரை, மண்வகை
மன் - மன்னன், பெருமை
மண்ணை - இளமை, கொடி வகை
மன்னை - தொண்டை, கோபம்
மாணி - அழகு, பிரம்மசாரி
மானி - மானம் உடையவர்
மாண் - மாட்சிமை
மான் - ஒரு விலங்கு
முணை - வெறுப்பு, மிகுதி
முனை - முன்பகுதி, துணிவு,
முதன்மை
வணம் - ஓசை
வனம் - காடு, துளசி
வண்மை - வளப்பம், கொடை
வன்மை - உறுதி, வலிமை
வண்ணம் - நிறம், குணம், அழகு
வன்னம் - எழுத்து, நிறம்
வாணகம் - அக்கினி, பசுமடி
வானகம் - மேலுலகம்
வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
வானம் - ஆகாயம், மழை
வாணி - கலைமகள், சரஸ்வதி
வானி - துகிற்கொடி

ல, ழ, ள பொருள் வேறுபாடு:

அலகு - பறவையின் மூக்கு, அளவு,
ஆண்பனை
அழகு - வனப்பு
அளகு - சேவல், பெண்கூகை
அலகம் - திப்பிலி
அளகம் - வெள்ளெருக்கு, நீர்
அலகை - கற்றாழை, பேய்
அளகை - அளகாபுரி, பெண்
அழம் - பிணம்
அலம் - கலப்பை
அளம் - உப்பு
அலத்தல் - அலட்டல், அலைதல்
அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
அலவன் - ஆண்நண்டு
அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
அழி - அழித்துவிடு
அலி - பேடி, காகம், விருச்சிகராசி
அளி - கருணை, கள், வண்டு
அல்லல் - துன்பம்
அள்ளல் - வாரி எடுத்தல்
அழை - கூப்பிடு
அலை - கடல், நீரலை, அலைதல்
அளை - தயிர், நண்டு, புற்று
அவல் - பள்ளம், உணவுப் பொருள்
அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
அல் - இரவு
அள் - அள்ளி எடு, நெருக்கம்
உலவு - நட
உளவு - ஒற்று
உழவு - கலப்பையால் உழுதல்
உழி - இடம், பொழுது
உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு
உளு - உளுத்துப் போதல்
உலை - கொல்லன் உலை, நீருலை
உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
உளை - பிடரி மயிர், சேறு, தலை
உழுவை - புலி
உளுவை - மீன்வகை
எல் - கல், மாலை, சூரியன்
எள் - எண்ணெய்வித்து, நிந்தை
எலு - கரடி
எழு - எழுந்திரு, தூண்
ஒலி - சப்தம், நாதம், காற்று
ஒழி - அழி, தவிர், கொல், துற
ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
ஒல் - ஒலிக்குறிப்பு
ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
கலகம் - போர், அமளி, இரைச்சல்
கழகம் - சங்கம், கூட்டமைப்பு
கழங்கம் - கழங்கு, விளையாட்டுக்
கருவி
களங்கம் - குற்றம், அழுக்கு
கலி - கலியுகம், பாவகை, சனி
கழி - கோல், மிகுதி, உப்பளம்
களி - மகிழ்வு, இன்பம்
கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
கழை - மூங்கில், கரும்பு,
புனர்பூசம்
களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
கல் - மலை, பாறை, சிறுகல்
கள் - மது, தேன்
கலம் - கப்பல், பாத்திரம்
களம் - இடம், போர்க்களம், இருள்
காலி - ஒன்றுமில்லாதது,
வெற்றிடம்
காளி - துர்க்கை, மாயை
காழி - சீர்காழி (ஊர்)
காலை - பொழுது,
விடியற்பொழுது
காளை - காளைமாடு, இளைஞன்
காலம் - பொழுது, நேரம்
காளம் - எட்டிமரம், சூலம்
கிலி - அச்சம், பயம்
கிழி - கிழித்துவிடு, முடிப்பு
(பொன்)
கிளி - பறவை, வெட்டுக்கிளி
கிழவி - முதியவள், மூதாட்டி
கிளவி - சொல், மொழி
குலி - மனைவி
குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச்
சதுரம், வயிறு
குளி -நீராடு
குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம்,
குடி
குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
குலை - கொத்து, மனம்
தடுமாறுதல்
குழை - குண்டலம், குழைந்துபோதல்
குலவி - மகிழ்ந்திருத்தல்
குழவி - குழந்தை, இளமை, யானைக்
கன்று அம்மிக்கல்
குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
குலிகம் -சிவப்பு, இலுப்பை
குளிகம் -மருந்து, மாத்திரை
குவலை -துளசி, கஞ்சா
குவளை - குவளை மலர், சொம்பு,
ஒரு பேரெண்
கூலம் - தானியம், கடைத்தெரு
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி(யார்) - பேய், காளை, வீரர்,
படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
கொலு - அரசசபை, திருவோலக்கம்
(தெய்வசபை), உல்லாசமாக
வீற்றிருத்தல்
கொழு - மழு, கலப்பையில் மாட்டும்
பெரிய இரும்பு, கொழு கொழுத்து
இருத்தல்
கொளு - புறப்பொருள்
வெண்பாமாலைத் துறை,
பொருந்துவாய்
கொலை - கொல்லுதல்
கொளை - கோட்பாடு, பயன்,
இசைப்பாட்டு, தாளம்
கொல்லாமை - கொலை செய்யாமை
கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை,
அடங்காமை
கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு
மலை
கொள்ளி - கொள்ளிக்கட்டை
கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
கொள்ளை - திருடுதல், மிகுதி
கோலம் - அழகு, அலங்காரம்
கோளம் - உருண்டை, வட்டம்
கோலை - மிளகு
கோழை - வீரமற்றவன், கபம்
கோளை - குவளை, எலி
கோல் - மரக்கொம்பு, அம்பு,
குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
கோள் - கிரகம்
கோலி - இலந்தை, விளையாடும்
குண்டு
கோழி - உறையூர், விட்டில், பறவை
கோளி - பூவாது காய்க்கும் மரம்,
ஆத்தி, ஆலம்
சலம் - நீர், சிறுநீர், குளிர்
சளம் - பொய், துன்பம், வஞ்சனை
சாலை - பாடசாலை, பொது
மண்டபம், அறக்கூடம்
சாளை - கடல்மீன்
சாழை - குடிசை, குச்சு
சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
சுளித்தல் - முறித்தல், சினத்தல்
சூலை - வயிற்று நோய்
சூளை - செங்கல் சூளை
சூல் - கர்ப்பம்
சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
சூள் - சபதம்
சேல் - மீன்
சேள் - மேலிடம்
சோலி - ரவிக்கை, காரியம்
சோழி - பலகரை
சோளி - கூடைவகை
தவளை - ஓர் உயிரி
தவலை - பாத்திரம்
தலம் - இடம், பூமி
தழம் - தைலம்
தளம் - மேடை, மாடி வீட்டின்
அடுக்கு
தழை - தாவர உறுப்பு
தலை - மண்டை
தளை - விலங்கு
தாலம் - உலகம், தேன்
தாளம் - இசைக்கருவி, ஜதி
தாலி - மங்கலநாண்
தாழி - கடல், குடம், பரணி
பெரியபாண்டம்
தாளி - தாளித்தல், பனைதால் -
நாக்கு, தாலாட்டு
தாழ் - தாழ்தல், குனிதல்
தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி,
காகிதம்.
துலக்கம் - ஒளி, தெளிவு
துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம்,
ஒளி
துலம் - கோரை, கனம்
துளம் - மாதுளை, மயிலிறகு
துலி - பெண் ஆமை
துழி - பள்ளம்
துளி - மழைத்துளி, திவலை,
சிறிய அளவு
துலை - ஒப்பு, கனம்
துளை - துவாரம், வாயில்
தூலி - எழுதுகோல், எழுத்தாணி
தூளி - புழுதி, குதிரை
தெழித்தல் - கோபித்தல், முழங்குதல்,
அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல்,
விதைத்தல்
தெல் - அஞ்சுதல்
தெள் - தெளிவான
தோலன் - அற்பன்
தோழன் - நண்பன்
தோலி - பிசின், ஒருவகை மீன்
தோழி - பாங்கி, நட்பால்
நெருக்கமானவள்
தோளி - அவுரி (ஒருவகை
குத்துச்செடி), அரக்கு
தோல் - சருமம், வனப்பு, விதையின்
மேல்பகுதி
தோள் - புயம், வீரம்
நலன் - நலம், அழகு, புகழ், இன்பம்,
நன்மை, குணம்,
நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
நலி - நோய்
நளி - குளிர்ச்சி, பெருமை
நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
நல் - நல்ல
நள் - இரவு, நடு, நள்ளிரவு
நாலம் - பூவின் காம்பு
நாழம் - இழிவுரை, வசவு
நாளம் - பூந்தண்டு, உட்துளை,
ரத்தநாளம்
நாலி - முத்து, கந்தை ஆடை
நாழி - உள்தொளையுள்ள பொருள்,
ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா,
பூரட்டாதி
நாளி - கல், நாய்
நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
நாழிகை - வட்டம், கடிகாரம்
நால் - நான்கு
நாழ் - குற்றம், செருக்கு
நாள் - காலம், திதி
நீலம் - ஒரு நிறம், கருங்குவளை,
இருள்
நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
நீல் - நீலம், காற்று
நீள் - நீளம், ஒளி
பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி,
சேனை, வன்மை, உறுதி, எடை
பழம் - கனி, முதுமை
பல்லி - சிற்றூர், இடையர் ஊர்,
உழுகருவி, ஓர் உயிரி,
வண்டியுறுப்பு
பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில்,
குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை,
பள்ளிக்கூடம்
பலி - பலியிடுதல், பலியுயிர்
பழி - குற்றம்
பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பாழ் - வீண், வெறுமை
பீழை - துன்பம்
பீளை - கண் அழுக்கு
புலி - காட்டு விலங்கு
புளி - புளியமரம், புளியங்காய்
புலை - புலால், ஊன், கீழ்மை
புழை - துளை, வாயில், நரகம்
புகல் - அடைக்கலம்
புகழ் - பெருமை
புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
புள் - பறவை
பூலம் - புற்கட்டு
பூளம் - பூவரசு
பூழை - துவாரம், கோபுரவாயில்
பூளை - பூளைச்செடி, இலவம்
பஞ்சு
பாலி - தானியக் குவியல், தூற்றாத
தானியம்
பாழி - கொடுத்தல், ஈதல்
பாளி - வரப்பு, எல்லை
பாலிவு - அழகு, நிறைவு
பாழிவு - பொழிதல், மேன்மை
போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
போளி - இனிப்புப் பண்டம்
பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
பொழிதல் - ஈதல், கொடுத்தல்,
சொரிதல், பெய்தல், நிறைதல்
மலம் - அழுக்கு, பாவம்
மழம் - இளமை, குழந்தை
மலை - குன்று, பொருப்பு,
வெற்பு,சிகரம்
மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
மழைத்தல் - மழை பெய்திருத்தல்,
குளிர்ந்திருத்தல்
மல்லிகை - மாலை, கழுத்தணி,
வரிசை
மாளிகை - அரண்மனை, கோயில்
மாலை - அந்திப்பொழுது,
பூமாலை
மாழை - மயக்கம், இளமை, அழகு
மாளை - புளியம்பட்டை
மால் - திருமால், மயக்கம், அருகன்,
இந்திரன், பெருமை, மேகம்
மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
முழை - குகை
முளை - முளைத்தல், தறி, ஆப்பு,
அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
முழி - விழி (விழித்தல்)
முளி - மரக்கணு, விரல்முளி,
வாட்டம்
மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை,
கோணம்
மூலை - இரு கோடுகள் சந்திக்கும்
இடம்
மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர்
உறுப்பு(முதன்மைப் பகுதி)
மெல்ல - மென்று தின்பது
மெள்ள - மெதுவாக
மாலி - மொளலி கிரீடம்
மாழி - மேழி, கலப்பை
மாளி - துணிமூட்டை
வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வளம் - வளமை, அழகு
வலவன் - திருமால்
வளவன் - சோழன், வேளாளன்
வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வளன் - செழுமை, வளப்பன்
வழப்பம் - வழக்கம், இயல்பு
வளப்பம் - வளமை, செழிப்பு
வலி - நோய், வலிமை, துன்பம்
வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
வளி - காற்று
வலை - மீன் முதலியன பிடிக்கும்
ஒரு கருவி
வழை - சுரபுன்னை, புதுமை,
இளமை
வளை - கை வளையல், எலி வளை
வல் - வலிமை, விரைவு, திறமை
வள் - ஒலிக்குறிப்புச் சொல்
வல்லம் - வாழை, ஓர் ஊர்
வள்ளம் - மரக்கலம், படகு, அளவு,
தொன்னை
வல்லி - பூமி, பெண், பிரிதல், படர்
கொடி
வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம்,
சந்திரன்
வலு - வலிமை, பலம், பற்று
வழு - குற்றம், தவறு, பழிப்புரை,
கேடு
வளு - இளமை, இளைய
வாலி - கிஷ்கிந்தை அரசன்
(இராமாயணம்)
வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு
காதணி
வாலை - இளம்பெண், திராவகம்
வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
வாழை - வாழைமரம்
வாளை - வாளை மீன்
வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
வாழ் - வாழ்வாயாக (என்று
வாழ்த்துதல்)
வாள் - போர்வாள், நீண்டகத்தி
விலா - விலா எலும்பு
விழா - திருவிழா, கொண்டாட்டம்
விளா - இளமை, வெண்மை, நிணம்
விழி - கண், கருவிழி
விளி - கூப்பிடு, அழை,
ஏழிசையில் ஒன்று
விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
விழை - விரும்பு, ஆசைப்படு
விளை - ஒரு மீன்வகை, விளைவி
(விளைச்சல்)
விலக்கு - விலக்கி விடு, தவிர்
விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
விலங்கு - பூட்டு, கை, கைகளைப்
பிணிக்கும் கருவி, மிருகம்
விளங்கு - திகழ் (திகழ்தல்),
சிற்றரத்தை (மூலிகை வகை)
வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
வேலம் - வேலமரம், தோட்டம் ்
வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
வேல் - வேலாயுதம்
வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன்,
ஆசை
வேலை - பணி, கடல்
வேளை - பொழுது, நேரம்,
ஒருவகைக் கீரை
ர, ற பொருள் வேறுபாடு
அர - பாம்பு
அற - தெளிய, முற்றுமாக
அரவு - பாம்பு
அறவு - அறுதல், தொலைதல்
அரம் - ஒரு கருவி
அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம்,
கடமை, அறநூல், துறவறம்
அரி - திருமால், அரிசி, அழகு,
அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு,
சிவன்
அறி - அறிந்துகொள்
அரிய - கிடைத்தற்கு அரிதான,
கஷ்டமான
அறிய - அறிந்துகொள்ள,
தெரிந்துகொள்ள
அரன் - சிவன்
அறன் - தர்மம், அறக்கடவுள்
அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று.
18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட
பெண்)
அறிவை - அறிவாய்
அருகு - புல்வகை (அருகம்புல்),
அண்மை
அறுகு - குறைந்து போதல்
அக்கரை - அந்தக் கரை
அக்கறை - ஈடுபாடு
அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு
மரம்
அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி,
ஒலி, பாசறை, சொல், குகை,
வஞ்சனை, மாளிகை
அரைதல் - தேய்தல்
அறைதல் - அடித்தல், சொல்லுதல்
அப்புரம் - அந்தப் பக்கம்
அப்புறம் - பிறகு
அர்ப்பணம் - உரித்தாக்குதல்
அற்பணம் - காணிக்கை செலுத்துதல்
அரு - உருவமற்றது
அறு - துண்டித்துவிடு,
அறுத்துவிடு
அருமை - சிறப்பு, அன்பு, இன்மை,
சுலபத்தில் கிடைக்காதது
அறுமை - நிலையின்மை, ஆறு
ஆரு - குடம், நண்டு
ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை,
நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
ஆர - நிறைய, அனுபவிக்க
ஆற - சூடு ஆற (குறைய)
ஆரல் - ஒருவகை மீன்
ஆறல் - சூடு குறைதல்
இரத்தல் - யாசித்தல்
இறத்தல் - இறந்துபோதல், சாதல்
இரகு - சூரியன்
இறகு - சிறகு
இரக்கம் - கருணை
இறக்கம் - சரிவு, மரணம்
இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழிறங்கி வா
இரவம் - இரவு
இறவம் - இறால் மீன்
இரவி - சூரியன், எருக்கு, மலை,
வாணிகத்தொழில்
இறவி - இறத்தல்
இரவு - இரவு நேரம், யாசித்தல்
இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி,
தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
இரை -ஒலி, உணவு
இறை - கடவுள், அணு, அரசன், ரேகை,
சந்து, கடமை, தலைமை, விடை,
உயரம், மூலை
இரு - இரண்டு, பெரிய, உட்கார்,
அமர்ந்துகொள்
இறு - ஒடி, கெடு, சொல்லு
இரும்பு - கடிவாளம், கிம்புரி,
ஆயுதம், ஓர் உலோகம்
இறும்பு - வண்டு, சிறுமலை
இருப்பு - கையிருப்பு, இருப்பிடம்,
ஆசனம், நிலை, பொருள், முதல்
இறுப்பு - வடிப்பு
இருத்தல் - அமர்ந்திருத்தல்,
காத்திருத்தல்
இறுத்தல் - வடித்தல், செலுத்தல்,
எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல்,
முடித்தல், முறித்தல்
இருக்கு - மந்திரம், ரிக் வேதம்
இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு
இரைத்தல் - ஒலித்தல்,
மூச்சுவாங்குதல்
இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு
உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி,
ஞானம், விடம்
உறவு - நட்பு, சுற்றம், எறும்பு
உரவோர் - அறிஞர், முனிவர்
உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்
உரி - தோல், மரப்பட்டை,
அரைப்படியளவு,
உரிச்சொல்,கொத்துமல்லி
உறி - உறிவெண்ணெய், தூக்கு
உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம்,
நிறம், அச்சம், பெருமை, மேன்மை
உறு - மிகுதி
உருக்குதல் - இளக்குதல், மெலியச்
செய்தல்
உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்
உரை - புகழ், விளக்கவுரை, நூல்,
பொன்மாற்று, அறிவுரை, சொல்
உறை - இடம், பண்டம், பொருள்,
மருந்து, பாலில் இடும் பிரை, துளி,
மழை, ஆடை, துன்பம், பாம்பின்
விஷப்பை
உரைப்பு - தங்குதல், தோய்தல்
உறைப்பு - காரம், கொடுமை
உரையல் - சொல்லல்
உறையல் - மாறுபாடு, பிணக்கு
உரிய - உரிமையான
உறிய - உறிஞ்ச
ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப்
பறவை
ஊறல் - தினவு, ஊற்று, சாறு,
வருவாய், ஊறுதல், களிப்பு
ஊரு - அச்சம், தொடை
ஊறு - இடையூறு, துன்பம், காயம்
உறுதல், தீண்டல், குற்றம், புண்,
கொலை
எரி - தீ, கார்த்திகை, பிரபை,
இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை,
கந்தகம்
எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக்
கூறுதல்
ஏர - ஓர் உவமஉருபு
ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)
ஏரி - நீர்நிலை, குளம்
ஏறி - உயர்ந்த, மேலே ஏறி
ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு
ஒறு - தண்டி, அழி, இகழ்
ஒருத்தல் - ஆண் விலங்குகளின்
பொதுப்பெயர்
ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல்,
வருத்துதல், வெறுத்தல், கடிதல்,
இகழ்தல், குறைத்தல்
ஒருவு - நீங்கு
ஒறுவு - வருத்தம், துன்பம்
கரடு - மரக்கணு, மணிக்கட்டு,
முருடு, வளர்ச்சியற்றது
கறடு - தரமற்ற முத்து
கரம் - கிரணம், விஷம், செயல், கை,
கழுதை
கறம் - கொடுமை.

Monday, March 30, 2020

நேருவும் - சர்தாரும்

உங்களுக்கு நரேந்திர மோதி மீது விமர்சனங்கள் இருக்கலாம்...
மோதிதான் இந்தியாவின் ஆக மோசமான பிரதமராக கூட இருக்கலாம்...
ஆக சகிப்புத்தன்மை இல்லாத முதல்வராக அவரது குஜராத் வரலாறு தெரியலாம்...
பல மாதங்களாக அவர் காஷ்மீரை தனிமைப்படுத்தி வைத்திருப்பதை கண்டு கோபப்படுங்கள்..  
பலலட்சம் வட இந்தியரை இந்த ஊரடங்கிலும் நடையாய் நடக்க விட்டு சாகடிப்பதற்காக விமர்சியுங்கள்.... 
அவர் கோடிகளை கார்பரேட்டுகளுக்கு கொடுத்துவிட்டு நம்மிடம் கையேந்தும் போது  
பட்டேல் சிலையை கயலான் கடையில் போடு என்ற மீம்ஸூகளை ஏற்க முடியவில்லை  

சர்தார் வல்லபாய் படேல் பிரதமராக இருந்திருந்தால், காஷ்மீர் பிரச்சனைக்கு அப்போதே தீர்வு ஏற்பட்டிருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை உங்களுக்கு அவரையும் ஒரு சங்கியாக யோசிக்க வைக்கிறது..
 
வரலாறு இதுதான்........
இந்தியாவின் சுதந்திர தினம் நெருங்கி வந்துக் கொண்டிருந்த வேளை அது. அமைச்சரவையை எப்படி அமைக்கலாம் என்ற ஆலோசனைகள் மும்முரமாக இருந்த சமயத்தில், 1947 ஆகஸ்ட் முதல் நாளன்று படேலுக்கு கடிதம் எழுதினார் நேரு.

"ஓரளவு சம்பிராதயங்கள் கடைபிடிக்கவேண்டும் என்பதன் அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் உங்களை சேர்த்துக் கொள்வதற்கான முறையான அழைப்பு விடுப்பதற்கான கடிதம் இது. இந்த கடிதத்திற்கு எந்தவித முக்கியத்துவமும் கிடையாது, ஏனெனில் நீங்கள் நம் அமைச்சரவையின் வலுவான தூண்."

நேருவின் இந்தக் கடிதத்திற்கு படேல் ஆகஸ்ட் மூன்றாம் தேதியன்று பதில் எழுதினார், ''அமைச்சரவையில் இணைவதற்கான அழைப்பு விடுத்த உங்கள் கடிதத்திற்கு நன்றி. நம் இருவருக்கும் இடையிலான பாசமும் அன்பும் 30 ஆண்டுகளாகத் தொடர்கிறது. நம்மிடையே சம்பிரதாய நடைமுறைகளுக்கு எந்தவிதமான அவசியமும் இல்லை.''

கடிதத்தில் படேல் மேலும் இவ்வாறு குறிப்பிடுகிறார், "எனது வாழ்வின் எஞ்சியுள்ள காலம் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். உங்களைப் போன்ற தியாகத்தை வேறு யாரும் செய்ததில்லை, நாட்டின் லட்சியத்தை நிறைவேற்ற அப்பழுக்கற்ற முழுமையான விசுவாசத்தை காட்டுவேன்."

"நமது நட்பையும் ஒற்றுமையையும் யாராலும் பிரிக்க முடியாது, சக்தி வாய்ந்த நம்முடைய உறவு வலுவானது. கடிதத்தில் நீங்கள் வெளிப்படுத்திய அன்புக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்..." என்று இளகிய நெஞ்சுடன் கடிதம் எழுதினார் இரும்பு மனிதர்.

படேலின் உணர்வுகள் வெறும் சம்பிரதாயமானவையோ, வெற்று வாய்ச்சவடால்களோ அல்ல. படேல் இறப்பதற்கு சுமார் ஒன்றரை மாதத்திற்கு முன் நேருவை பற்றி அவர் சொன்னது மரண சாசனத்திற்கு சமமானது.

1950, அக்டோபர் இரண்டாம் தேதியன்று இந்தோரில் ஒரு பெண்கள் மையத்தின் திறப்பு விழாவுக்கு சென்ற படேல் அங்கு உரையாற்றியபோது, ''இப்போது மகாத்மா காந்தி நம்முடன் இல்லை, அவர் தன்னுடைய பிரதிநிதியை நியமித்து அதனை அறிவித்தும் விட்டார். காந்தியின் சீடர்கள் அவர் சொன்னதை அடியொற்றி நடக்கவேண்டும்.''

நேருவிற்கும் படேலுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றாலும், இருவரும் எதிரிகள் இல்லை என்பதும் உண்மையே. படேல் யதார்த்தவாதி என்றால், நேரு கனவு காணும் அரசியல்வாதி. படேல் அமைப்பின் மீது பிடிப்பு கொண்டவர். ஆனால் நேருவிற்கு தேசிய அளவில் இருந்த புகழ் இரும்பு மனிதருக்கு இல்லை.

இருவரும் காந்தியின் சீடர்களே. நேருவே பிரதமராக பதவியேற்று நாட்டை வழிநடத்த வேண்டும் என்று முடிவு செய்தார் காந்தி. நேருவின் கண்ணோட்டம், விஷயங்களை அவர் அணுகும் முறை மற்றும் உலக அளவில் அவருக்கு இருந்த அங்கீகாரத்தை கருத்தில் கொண்டே காந்தி இந்த முடிவை எடுத்தார்.

காங்கிரஸார் படேலின் குடும்பத்தினரை மறந்து விட்டதாகவும், ஆனால் நேருவின் பரம்பரை, ஆட்சிப் பொறுப்பில் தொடர்வதாகவும் மற்றொரு பிரசாரம் கூறுகிறது. இதில் உண்மை எள்ளளவும் கிடையாது

உண்மையில், நேரு உயிருடன் இருந்த காலத்தில் தனது ஒரே வாரிசான இந்திரா பிரியதர்ஷினியை ஆட்சிப் பொறுப்பில் அமரவைக்கவில்லை. நேருவின் உதவியாளராகவே இந்திரா செயல்பட்டார். 

ஆனால் 1950இல் சர்தார் படேல் இறந்த பிறகு, நேரு படேலின் பிள்ளைகள் குறித்து அக்கறை எடுத்துக் கொண்டார். இந்திராவின் மீது காட்டிய அதே அக்கறையை, சர்தார் படேலின் மகள் மணிபென் படேல் மீதும் நேரு காட்டினார். 1952க்கு முன்னரே பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் நேரு.

மணிபென் படேல் தெற்கு கைரா நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றார். 1957இல் ஆனந்த் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964இல் காங்கிரஸ் அவரை மாநிலங்களவைக்கு அனுப்பியது.

1953 முதல் 1956 வரையிலான காலகட்டத்தில் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டி செயலரகவும் 1957 முதல் 1964 வரை குஜராத் மாநிலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தார் அவர்.

நேருவின் காலகட்டத்தில் காங்கிரஸில் மணிபென் படேலுக்கு மிகுந்த மரியாதை வழங்கப்பட்டது. அதேபோல் வல்லபாய் படேலின் மகன் தஹ்யாபாய் படேலுக்கும் காங்கிரஸ் சிறப்பான மரியாதையை வழங்கியது.
1957 மற்றும் 1962இல் நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், 1973 முதல் தனது வாழ்நாள் இறுதிவரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தார்.

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக மணிபென் மற்றும் தஹ்யாபாய்க்குக் வாய்ப்பு வழங்கப்பட்டபோது உன்மையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஜன சங் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.

அதாவது சர்தார் படேலின் மகனும், மகளும் ஒரே சமயத்தில் மக்களவைக்கும், மாநிலங்களவைக்கும் அனுப்பப்பட்டனர்.

படேல் பிரதமராக இருந்திருந்தால் காஷ்மீர் விவகாரத்தில் ஒரு முடிவு கிடைத்திருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது படேல் ராணுவ பலத்தை பயன்படுத்தி காஷ்மீரை இந்தியாவின் அங்கமாக்கியிருப்பார், நேருவின் `தாராள மனப்பான்மை` அதை தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
உண்மை என்னவென்றால், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு சலுகைகள் வழங்கும் இந்திய அரசியலமைப்பின் சட்டப் பிரிவு 370ஐ வடிவமைத்தவர்களில் முக்கியமானவர் சர்தார் படேல்.

 சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பியான இந்தியாவின் இரும்பு மனிதர் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து இந்தியாவை கட்டமைத்த தூண்களில் ஒருவர்.

மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு, 1948 பிப்ரவரி நான்காம் தேதியன்று, ஆர்.எஸ்.எஸ் சட்டவிரோத அமைப்பு என்று அறிவித்தவர்

' பொதுச் சொத்துக்களுக்குத் தீயிடல், சேதப்படுத்துதல், கொள்ளை போன்ற சம்பவங்களில் அவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவருகிறது. சட்ட விரோதமாக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும், குண்டுகளையும் அவர்கள் சேகரித்துள்ளனர். அவர்களுடைய செயல்பாடுகள் ரகசியமாகவே உள்ளன,' என்றும் அறிவித்தார்.  காந்தியின் படுகொலையை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடியதைக் கண்டு பொருமியவர்

ஆர்.எஸ்.எஸ்ஸின் உதவி இல்லாமல் காந்தி கொலை செய்யப்பட்டிருக்க முடியாது என்றும் நிரம்பியவர்.. 

ஆனால் இப்படிப்பட்ட ஒரு அமைப்பின் மீதான தடையை நீக்கியதற்கு ஜனநாயகம் என்ற நடுநாயகம் தான் காரணம். அதோடுகூட, பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அறிவுறுத்தலும் மற்றொரு காரணமாக கருதப்படுகிறது.

தனக்கும் நேருவுக்கும் இடையில் பகைமை இருப்பதாக கூறப்படுவதை தொடர்ந்து மறுத்துவந்தார் சர்தார் படேல். அவர் இதுகுறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகவே பேசினார், ''நாடு எதிர்கொண்டிருக்கும் அனைத்து பிரச்ச்சனைகளிலும் நான் பிரதமருடன் உறுதுணையாக நிற்கிறேன். நாங்கள் இருவரும் எங்கள் தலைவர் மகாத்மா காந்தியின் பாதத்தில் அமர்ந்து பாரதத் தாயின் விடுதலைக்காக பாடுபட்டோம். இன்று மகாத்மா நம்முடன் இல்லை. இந்த நிலையில் நாங்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவதைப் பற்றி சிந்திக்கக்கூட மாட்டோம்.''

படேல் நாட்டின் முதல் பிரதமராகும் வாய்ப்பை நேரு தட்டிப் பறித்தார் என்று சங்க பரிவாரம் கூறுவது போல படேல் நினைக்கவில்லை என்பதை அவரே பலமுறை சொல்லிவிட்டார். சர்தார் வல்லபாய் படேல், சாவர்கர்  விரும்பிய இந்தியாவை அல்ல, மகாத்மா காந்தி கனவு கண்ட உன்னத பாரதத்தை உருவாக்கவே நினைத்தார்.

இந்தியாவை 'இந்து நாடாக' மாற்றும் எண்ணத்தை 'பைத்தியக்காரத்தனம்' என்று வல்லபாய் படேல் வெளிப்படையாகவே விமர்சித்தார், 

இத்தகைய உயர்ந்த வரலாற்றுக்கு சொந்தகாரர் பட்டேல்
உயரமானவருக்கான உயரமான சிலை பெருமைக்குரியது...
அதை மூன்று லட்சம் கோடி செலவிட்டு கட்டியிருந்தாலும் தகும்...

தயை கூர்ந்து மோதியை
விமர்சிக்க பட்டேலை அவமான படுத்தாதீர்...  
அவர் நம் வரலாற்று நூல்களில் பெருந்தடம் பதித்தவர்...
நம் நினைவு சின்னமாய் 
சிலையாய் உயர்ந்து நிற்க தக்கவர்...
புகழ் மாலையிட வேண்டியவரை
இஷ்டத்திற்கு பேசுவது...
தந்தை பெரியாரை சங்கிகள் பேசுவது போலாகி விடும்

(படத்திலிருப்பது நாடாளுமன்றதிற்குள் நேரு வைத்த பட்டேலின் திருவுரு)

Courtesy
Adv. Prof.Mr.kennady sir

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்

🛞புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…! உலகிலேயே அழகா...